For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தயாரிப்பாளர் எஸ். பி. செளத்திரிக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்திய பிரபலங்கள் !

  |

  சென்னை: சந்தானம் நடித்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான டகால்டி திரைப்பட தயாரிப்பாளருக்கு இன்று பிறந்த நாள் மேலும் சந்தானத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

  காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் தான் சந்தனாம். லொல்லு சபாவில் தனது நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்தவர் சந்தானம். பின் சிம்புவால் அடையாளம் காட்டப்பட்டு பின்னாளில் உச்சம் தொட்டவர்.

  தனது டைமிங் காமெடி மற்றும் ஹீரோக்களை தாறுமாறாக கலாய்ப்பது என சந்தானம் அனைவரையும் ரசிக்க வைத்தார். காமெடியனாக இருந்தது போதும் என்று ஹீரோவாக அடி எடுத்து வைத்தார்.

  மிரட்டல் லுக்கில் விஷ்ணு விஷால்.. இன்னமும் எப்படி மெயின்டெயின் பண்றீங்க என வியக்கும் ஃபேன்ஸ்!மிரட்டல் லுக்கில் விஷ்ணு விஷால்.. இன்னமும் எப்படி மெயின்டெயின் பண்றீங்க என வியக்கும் ஃபேன்ஸ்!

  புதிய முயற்ச்சி

  புதிய முயற்ச்சி

  18 ரிலீஸ் நிறுவனம் சார்பாக பல புதிய முயற்சிகள் செய்து வரும் தயாரிப்பாளர் சௌத்ரி , மேலும் பல புதிய யுக்திகளை கை ஆளுகிறார். இன்று பிறந்தநாள் காணும் அவர் பல பிரபலங்களிடம் வாழ்த்தும் பெற்று வருகிறார் . யோகி பாபு நயன்தாரா என்பதை தாண்டி யோகி பாபு காஜல் அகர்வால் இணையும் அடுத்த படைப்பு என்று சமீபத்தில் வந்த பல அப்டேட்ஸ் மிகவும் வைரலாக பேச பட்டது. இவர் மருத்துவராக இருப்பதினால் மிக பெரிய அழவில் சமூக சேவை ஒரு பக்கம் செய்தாலும் இன்னொரு பக்கம் சினிமா டாக்டராக பல புதிய கதைகளை ஆப்பரேஷன் செய்து கொண்டு தான் இருக்கிறார். நல்ல சினிமா ரசிகனாக , நல்ல ஸ்க்ரிப்ட்ஸ் செலக்ட் செய்கிறார் .

  பெரிய ஹிட்

  பெரிய ஹிட்

  சந்தானத்துக்கு ஹீரோவாக முதல் படமே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , இது தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். படம் சுமார் ஆகவே இருந்தது, இரண்டாவது படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதன் பின் இவருக்கு கடந்த வருடம் ஒரு பெரிய ஹிட் கொடுத்தது ஏ1 திரைப்படம்.

  வெற்றி கூட்டணி

  வெற்றி கூட்டணி

  இந்த வருடம் வெற்றியுடன் ஆரம்பித்தார் சந்தானம் இதனை அடுத்து தொடர்ந்து மூன்று முதல் நான்கு படங்களில் நடித்து வருகிறார் சந்தானம். அதில் குறிப்பாக அவரது அடுத்த படத்தின் அப்டேட் சமூக வலைதளங்களில் படு வேகமாக டிரெண்டாகி வருகிறது.சந்தானத்தின் காமெடி கவுண்டர்களை வெளிக்கொண்டு வந்த லொல்லு சபா இயக்குனர் ராம் பாலா தான் சந்தானத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும்.

  தில்லுக்கு துட்டு

  தில்லுக்கு துட்டு

  இப்படம் தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாவது பாகம் என்று சொல்லப்படுகிறது. இப்படம் முழுக்க முழுக்க 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளது. இப்படத்தை டகால்டி படத்தை தயாரித்த எஸ்.பி. சௌத்திரியே இப்படத்தையும் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானத்துடன் யோகி பாபுவும் இணைந்து மிரட்டப்போவதாக கூறப்படுகிறது.

  நல்ல மனிதர் என்று

  நல்ல மனிதர் என்று

  இன்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். பி. செளத்தரிக்கு பிறந்த நாள் இதனை அடுத்து இன்று இப்படத்தின் பல புதிய அப்டேட்ஸ் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவருக்கு இயக்குனர் சசிகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, நடிகர் யோகி பாபு, இயக்குனர் ராம் பாலா ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக யோகி பாபு கூறியதாவது இவர் ஒரு டாக்டர் ஆக இருந்து சினிமாவிற்குள் வந்தவர், பல கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார் என்று மிகவும் மனம் நெகிழ கூறியுள்ளார். முருக பெருமான் உங்கள் முயற்சிகளை எப்போதும் உடன் இருந்து நடத்துவார் என்று யோகி பாபு பேசி வாழ்த்து கூறினார் .

  3டி தொழில்நுட்பத்தில்

  3டி தொழில்நுட்பத்தில்

  18 ரிலீஸ் தயாரித்த டகால்டி திரைப்படம் பற்றி பல மாற்று கருத்துக்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த வருடத்தின் ஹிட் படங்களுள் ஒன்றாக உள்ளது. தற்போது இவர் மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி அமைத்து தயாரிக்கும் அடுத்த படத்தின் மீது ஏதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுவும் ராம் பாலா, சந்தானம் என்றால் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால் படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்று திரை ரசிகர்களால் நம்பப்படுகிறது. தமிழில் 2.0 விற்கு பிறகு எடுக்கப்படும் 3டி திரைப்படம் தில்லுக்கு துட்டு 3 என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற 3டி படங்கள் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல ஆனால் கதைக்காக தயாரிப்பாளர் செளத்தரி இதனை செய்வது பலரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

  English summary
  Producer sp Chaudhary Celebrating his birthday on 15th July
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X