பெரியார் இருந்தால் பைசன் படத்தை கொண்டாடியிருப்பார் - தயாரிப்பாளர் எஸ்.பி. செளத்ரி கருத்து!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் மற்றும் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பைசன் திரைப்படம் முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தை வருகிறது.

இந்த தீபாவளிக்கு பாக்ஸ் ஆபீஸ் வின்னர் டியூட் என்றும் விமர்சகர்களின் பாராட்டு மழையில் வெற்றிப் படமாக பைசன் மாறியுள்ளதாக பலரும் கொண்டாடி வருகின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் ஆளாக படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், பிரபல தயாரிப்பாளரும் பைசன் படத்தை பாராட்டியுள்ளார்.

Producer SP Chowdhary praises Dhruv Vikram s Bison movie

இன்றைய காலக் கட்டத்தில், பெரியார் இருந்திருந்தால், சர்வ நிச்சயமாக, பைசன் படத்தையும், மாரி செல்வராஜையும் கொண்டாடி தீர்த்திருப்பார்.

பெரியார் காலத்தில், மாரி செல்வராஜ் பிறந்திருந்தால், பெரியார் வேலையை, மேலும் இலகுவாக்கி இருப்பார் என்றால், சற்றும் மிகையல்ல.

இது போன்ற சமூக நல்லிணக்கம் போற்றும் படங்களை, பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும் போட்டுக் காட்டினால், வருங்கால சந்ததிகள், சரியான பாதையில் செல்லப் பேருதவியாக இருக்கும். சமூக நல்லிணக்கத்தை போற்றும், நம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் இதற்கு ஆவண செய்ய வேண்டும் என பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளருமான எஸ் பி சௌத்ரி அவர்கள் பைசன் படத்தை பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X