»   »  'விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்த தாக்குதல்'... சமூக வலைத்தள பயனாளர் மீது வழக்கு!

'விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்த தாக்குதல்'... சமூக வலைத்தள பயனாளர் மீது வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விமர்சனம் என்ற பெயரில் சினிமாவையும் சினிமா கலைஞர்களையும் தரக்குறைவாகப் பேசி அவதூறு பரப்புவதாகக் கூறி இரு சமூக வலைத் தளப் பயனாளர்கள் மீது ஜேஎஸ்கே கோபி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும் இவர்களின் யுட்யூப் சேனல்களை முடக்கவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

ஜேஎஸ்கே கோபியில் இந்த நடவடிக்கைக்கு திரையுலகின் முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் பிஆர்ஓ யூனியன் ஆகியவையும் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஜேஎஸ்கே கோபி கூறுகையில், "நான் திரை விமர்சனங்களை எதிர்க்கவில்லை. விமர்சனம் என்பது அனைவருடைய உரிமை. ஆனால் அதே சமயம் சமுக வலைதளமான YOUTUBE போன்றவைகளில் விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக நடிகர் நடிகைகளையும் இயக்குநர்களையும் மற்றும் டெக்னீஷீயன்களை விமர்சனம் செய்து மார்க் போட்டு அதில் நடுவே விளம்பரம் செய்து பிழைத்து, அதே சினிமாவை கேவலமான முறையில் பேசும் ஒரு சில நபர்கள் மீதுதான் வழக்குத் தொடர்கிறேன்.

இதற்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் மற்றும் பி ஆர் ஓ யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளன. நிச்சயமாக YOUTUBEல் வரும் இது மாதிரியான அநாகரீகமான விமர்சனங்கள் விரைவில் நிறுத்தப்படும். சமூக வலைதளமான YOUTUBE-ல் சினிமா விமர்சனம் என்ற பெயரில் சினிமா நடிகர் நடிகைகளையும் இயக்குநர் தொழில்நுட்ப கலைஞர்களையும் தரக்குறைவாக பேசி விமர்சித்து படம் ரிலீஸான முதல்நாளே அந்த திரைப்படத்தின் முழுக்கதையும் கூறி அந்த தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தக்கும் பெரும் இழப்பீடு ஏற்படுத்தும் இரு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளேன்.

எனது இந்த நடவடிக்கைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம்,பி ஆர் ஓ யூனியனும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சினிமாவை கேவலப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வரும் இந்த மாதிரி நபர்கள் நடத்தும் சேனல்களை முடக்க YOUTUBE LEGAL அலுவலகத்திற்கும் புகார் அனுப்பியுள்ளோம்," என்றார்.

ஜேஎஸ்கே கோபிக்கு தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளன.

English summary
With the support of Producers Council, a producer is suing case case against two Social Network users for their perverting reviews about new releases.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil