»   »  ரஜினியின் கோச்சடையான் பட தயாரிப்பாளர் புற்றுநோயால் மரணம்: திரையுலகினர் இரங்கல்

ரஜினியின் கோச்சடையான் பட தயாரிப்பாளர் புற்றுநோயால் மரணம்: திரையுலகினர் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோச்சடையான் பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான், ஷங்கரின் ஜீன்ஸ், ஜோடி, மின்னலே, இன்ஃபெர்னோ, சஜ்னி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் சுனந்தா முரளி மனோகர்.

Producer Sunanda Murali Manohar is no more

லண்டனில் வசித்து வந்த அவர் பெங்களூர், சென்னை என்று பயணம் செய்து கொண்டு பல மொழிகளில் படங்களை தயாரித்தார். இந்நிலையில் சுனந்தாவுக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தெரிய வந்தது.

ஆறு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த சுனந்தா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிர் இழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சுனந்தாவுக்கு டாக்டர் முரளி மனோகர் என்ற கணவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kochadaiyan producer Sunanda Murali Manohar passed away on saturday after fighting with cancer for the past six months. Film industry is saddened by the news of her demise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X