Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாநாடு முடிஞ்சது...அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் காமாட்சி
சென்னை : தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் சுரேஷ் காமாட்சி, குறிப்பிடப்படும்படியான பல படங்களை தயாரித்துள்ளார். மிக மிக அவசரம், மாநாடு உள்ளிட்ட 6 படங்களை இதுவரை தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.
சிம்பு நடித்த புதிய சையின்ஸ் ஃபிக்சன், அரசியல், திரில்லர் படமான மாநாடு படத்தை சமீபத்தில் தான் தயாரித்து முடித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படம் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான மாநாடு டிரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
யாரடி
நீ
மோகினி
சீரியலின்
முடிவு
உங்கள்
கையில்…
ரசிகர்களுக்கு
ஷாக்
கொடுத்த
ஜீ
தமிழ்
!

தள்ளிப் போகும் மாநாடு
மே மாதமே ரிலீசாகி இருக்க வேண்டிய மாநாடு, கொரோனா இரண்டாம் அலை காரணமாக இதுவரை ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இந்த படம் ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளதாக கூட தகவல் பரவியது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மாநாடு படக்குழு, படத்தை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்து விட்டனர்.

ஆயுத பூஜைக்கு ரிலீசா
தியேட்டர் திறப்பிற்காக காத்திருந்தாலும், மாநாடு படத்தை அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் இசையில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

அடுத்த படத்தை அறிவித்த சுரேஷ் காமாட்சி
மாநாடு படத்தின் வேலைகள் முழுவதும் முடிவடைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் தயாரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி. இந்த படத்தை டைரக்டர் ராம் தான் இயக்க போகிறாராம். ஹீரோவாக நிவின் பாலி நடிக்க உள்ளார். படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

ஹீரோயின் இவர் தானா
பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நடிக்கிறாராம். மிக முக்கியமான ரோலில் சூரியும் நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்கும் யுவன்சங்கர் ராஜாவே இசையமைக்க உள்ளார். அடுத்த சில வாரங்களில் இந்த புதிய படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக சுரேஷ் காமாட்சி படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

ட்விட்டரில் உறுதி செய்த வி ப்ரொடக்ஷன்ஸ்
இது பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள சுரேஷ் காமாட்சி, தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம் என குறிப்பிட்டுள்ளார். வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்சின் 7 வது படைப்பில் இவர்கள் இணைய உள்ளதாக டைரக்டர் ராம், நிவின் பாலி, அஞ்சலி, சூரி பெயர்களை சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.