»   »  ' 'தீரன்' படத்தை பைரசி தளத்தில் பாருங்கள்...' - தயாரிப்பாளர் கருத்தால் சர்ச்சை!

' 'தீரன்' படத்தை பைரசி தளத்தில் பாருங்கள்...' - தயாரிப்பாளர் கருத்தால் சர்ச்சை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
' 'தீரன்' படத்தை பைரசி தளத்தில் பாருங்கள்...' - தயாரிப்பாளர் கருத்தால் சர்ச்சை!- வீடியோ

சென்னை : 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவே பைரசியில் பார்க்கச் சொன்னது கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றதும் அவர்களது குழுவினர் முதலில் 'பைரசி'யை ஒழிக்கப் பாடுபடுவதாகச் சொன்னார்கள்.

ஆனால், ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் 'பைரசி' இணையதளங்களை ஒழிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள் சினிமா துறையினர். இந்நிலையில், எஸ்.ஆர்.பிரபுவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பைரசி ஒழிப்பு

பைரசி ஒழிப்பு

சில மாதங்களுக்கு முன்பாக 'பைரசி' இணையதளத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக விஷால் தரப்பில் மிகவும் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், அதன் பின் அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இப்போதும் படம் வெளியான முதல் நாளே இணையதளங்களிலும் லீக்காகி விடுகிறது.

பைரசியில் பார்த்துவிடுங்கள்

பைரசியில் பார்த்துவிடுங்கள்

எந்தத் திரைப்பட விழா நடந்தாலும் பைரசியை விரைவில் ஒழிப்பேன் என்று சொல்லி வருகிறார்களே தவிர இதுவரை ஒழிக்க முடியவில்லை. தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளராக இருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவே, ஒரு ரசிகரிடம் பைரசி இணையதளத்தில் படத்தைப் பார்த்து விடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

தானமாக 10 டாலர் கொடுங்கள்

தானமாக 10 டாலர் கொடுங்கள்

ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில் எங்கள் பகுதியில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை சப்டைட்டிலுடன் பார்க்க முடியவில்லை என்று கேட்டதற்குத்தான் அவர் அப்படி பதில் அளித்துள்ளார். படத்தை பைரசி தளத்தில் பார்த்துவிட்டு 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பெயரைச் சொல்லி யாருக்காவது 10 டாலர் தானமாக வழங்கி விடுங்கள் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் பிரபு.

பைரசியை ஒழிக்கமுடியாதா

பைரசியை ஒழிக்கமுடியாதா

ஒரு பக்கம் பைரசி இணையதளங்களை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் பைரசி இணையதளங்களில் படத்தைப் பாருங்கள் என்று சொன்னதன் மூலம் விஷால் தரப்பினரால் இன்னும் 'பைரசி' இணையதளங்களை ஒழிக்க முடியவில்லை என்றே தெரிகிறது. அதற்காக அவர்கள் செய்தது என்று சொன்னதெல்லாம் வீண் பேச்சுதான் என எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

English summary
Producer S.R.Prabhu has shocked fans, He told fans to look at the film on the piracy site and donate 10 dollars by the name of 'Theeran Adhigaaram Ondru'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil