»   »  ஹீரோ அவதாரம் எடுத்த தயாரிப்பாளர்!

ஹீரோ அவதாரம் எடுத்த தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : டாக் என்டர்டெயின்மென்ட் சார்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய 'அம்மணி', குகன் சென்னியப்பன் இயக்கிய 'சவாரி' ஆகிய படங்களைத் தயாரித்தவர் வெண் கோவிந்தா. இவர் இப்போது 'கறிச்சோறு' என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.

'கறிச்சோறு' படத்தில் வெண் கோவிந்தாவுக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இவர்கள் தவிர ராதாரவி, வையாபுரி, அஸ்வின், மைம் கோபி, போஸ் வெங்கட், டேனியல் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

Producer turns to hero

'கறிச்சோறு' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் என அத்தனை பொறுப்புகளையும் விஜி வென்ஜி என்ற புதுமுக இயக்குனர் ஏற்றுள்ளார். கௌதம் ஜார்ஜ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சிவா பத்மநாபன் இசை அமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. படத்தை வேகமாக முடித்து வருகிற ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், வெண் கோவிந்தா ஹீரோவாகவே களமிறங்கியிருக்கிறார்.

English summary
Producer Ven Govinda, from tag entertainment is now producing 'Karisoru' movie and act as a hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil