»   »  நான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட்.. "ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே"... விஷால் "லந்து"!

நான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட்.. "ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே"... விஷால் "லந்து"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கிய செய்தி அறிந்து விஷால் ட்விட்டரில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது. மேலும் இதே போன்று தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்து கொண்டார் என கூறி சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

Producer Vishal responds to suspension from council

இதற்கான அறிவிப்பை தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் இது குறித்து விஷால் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள செய்தியை அறிந்தேன். 😂😂😂😂 குழந்தைகள் தின வாழ்த்துக்கள். தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா துறைக்காக தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vishal tweeted that, 'Well got da news dat am suspended fm prod council as a member.😂😂😂😂 happy children's day.wil continue 2 fite 4 the prod n da industry.GB'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil