»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

காந்தி படத்தை தயாரித்த ரிச்சர்ட் அட்டன்பரோ தாய்லாந்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் குடும்பத்துடன் பலியானார்.

பிரிட்டிஷ் தயாரிப்பாளர்களில் அட்டன்பரோ புகழ் பெற்றவர். இவர் தயாரித்த காந்தி படம், பிரிட்டிஷ் படங்களிலேயே அதிகஆஸ்கார்களை வென்ற படம் என்ற பெருமையை படம் வெளியானபோது பெற்றது.

அத்தகைய சிறப்பு மிக்க அட்டன்பரோ கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் பலியானார். தாய்லாந்து நாட்டில் புகெட்என்ற சுற்றுலாத் தளத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

அப்போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அட்டன்பரோ, அவரது பேத்தி லூசி (14), அப்பா மைக்கேல், அத்தை ஜேன் ஹாலண்ட், மூத்தமகள் ஜேன் ஆகியோர் சுனாமி அலையில் சிக்குண்டு பலியாகினர்.

லூசியின் சகோதரி ஆலிஸ் (17) பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அட்டன்பரோவின் மருமகன் மைக்கேல் ஹாலண்ட், பேரன் சாம்ஆகியோர் காயமின்றி உயிர் பிழைத்தனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil