»   »  தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலை முன்மொழிந்த கமல், குஷ்புக்கு மிக்சர் தானா?

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலை முன்மொழிந்த கமல், குஷ்புக்கு மிக்சர் தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷாலின் வேட்புமனுவை உலக நாயகன் கமல் ஹாஸன் முன்மொழிந்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுவோம் என்றார். அதன் பிறகு அவரை சஸ்பெண்ட் செய்தது தயாரிப்பாளர் சங்கம்.

Producers council election: Kamal backs Vishal

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றுள்ளார் விஷால். நீதிமன்றம் கெடுவிதித்த நிலையில் விஷாலின் சஸ்பெண்ட் உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் இன்று ரத்து செய்தது.

இதையடுத்து விஷால் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி நடக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல் ஹாஸன் முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார்.

தலைவர் சங்க பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று முன்பு விஷால் அறிவித்தார். இதையடுத்து விஷால் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் குஷ்பு கூறினார். அப்படி என்றால் குஷ்புவுக்கு மிக்சர் தானா?

English summary
Kamal Haasan is on Vishal's side in producers council election. Vishal is contesting for the president post.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil