»   »  தயாரிப்பாளர் சங்க தேர்தல்.... விஷால், டி சிவா உள்பட 5 பேர் போட்டி

தயாரிப்பாளர் சங்க தேர்தல்.... விஷால், டி சிவா உள்பட 5 பேர் போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் ஏப்ரல் 2-ம் தேதி நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால், கேயார், டி.சிவா உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம்.

Producers council election on April 2nd

இதுவரை கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனித்தது. அந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

நிர்வாகப் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியிடவுள்ளனர். இதற்கான மனுத் தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு கௌதம் வாசுதேவ் மேனன், பவித்ரன், பிரகாஷ்ராஜ், ஏ.எம்.ரத்னம், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 8 பேர் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு 4 பேர்

பொருளாளர் பதவிக்கு பாபு கணேஷ், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஆர்.பிரபு, விஜயமுரளி ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. இதைத் தவிர கௌரவச் செயலாளர்கள் பதவிக்கு ஏ.எல்.அழகப்பன், ஞானவேல்ராஜா, சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் போட்டியிடுகின்றனர். இதே போல் செயற்குழு உறுப்பினர்களுக்கும் பல முனைப் போட்டி நிலவுகிறது.

ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலின் மேற்பார்வை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
The Producers council election will be held on April 2nd and there are 5 contestants clashing for the top post.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil