»   »  வினுசக்ரவர்த்தி மரணம்... தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரங்கல்!

வினுசக்ரவர்த்தி மரணம்... தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரங்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வினுச்சக்கரவர்த்தி மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இரு சங்கங்களும் விடுத்துள்ள அறிக்கை:

Producers Council and Nadigar Sangam condoles to Vinuchakkaravarthy

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படம் மூலம் திரைக்கதை எழுதி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'வண்டிச் சக்கரம் ','கோயில் புறா', 'இமைகள்', 'பொண்ணுக்கேத்த புருஷன் ' ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும் பணி புரிந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், படுகா, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா.

தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் இன்று வியாழக்கிழமை காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.".

English summary
Producers council and Nadigar sangam have conveyed condolence to the demise of actor Vinuchakkaravarthy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil