»   »  தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு தவறானது... சவாலே சமாளி திட்டமிட்டபடி வெளியாகும் - கவிதா பாண்டியன்

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு தவறானது... சவாலே சமாளி திட்டமிட்டபடி வெளியாகும் - கவிதா பாண்டியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாயும் புலி படவிவகாரத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் புதியபடங்களைத் திரையிடமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

இதனால் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியடைந்திருப்பதோடு திட்டமிட்டபடி தங்கள் படம் வெளியாகும் என்றும் உறுதியாக சொல்கின்றனர்.


இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் சவாலே சமாளி படத்தின் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கவிதா பாண்டியன்.


சவாலே சமாளி படத்தில் இவரும் ஒரு தயாரிப்பாளரே என்பது குறிப்பிடத்தக்கது.


பாயும்புலி

பாயும்புலி

விஷால் - காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியிருக்கும் பாயும் புலி திரைப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. இந்நிலையில் லிங்கா படம் நஷ்டஈடு விவகாரம் தொடர்பாக பாயும்புலி திரைப்படத்திற்கு பிரச்சினை எழுந்தது. இதனைத் தீர்க்கும் பொருட்டு நாளை முதல்( செப்டம்பர் 4) எந்த புதிய திரைப்படத்தையும் வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.


பாயும் புலி திட்டமிட்டபடி வெளியாகும் - விஷால்

இந்த விவகாரத்தில் நடிகர் விஷால் நாளை பாயும்புலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று தனது ட்விட்டர் மூலம் அறிவித்திருக்கிறார்.


சவாலே சமாளி

சவாலே சமாளி

அசோக்செல்வன் - பிந்துமாதவி நடிப்பில் சவாலேசமாளி படமும் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தை அருண்பாண்டியனின் மகள் கவிதாபாண்டியன் தயாரித்திருக்கிறார். அவரிடம் இதுபற்றிக் கேட்ட போது எங்களுடைய படம் திட்டமிட்டபடி நாளை (04.09.2015) உலக முழுவதும் 170 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதி அளித்திருக்கிறார்.


திடீரென நிறுத்த முடியாது

திடீரென நிறுத்த முடியாது

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறும்பொழுது "படத்தை திடீரென நிறுத்த முடியாது. ஏனேனில் பல கோடி செலவில் சரியான திட்டமிடலுடன் படம் தயாரிக்கப் பட்டு ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப் பட்டுள்ளது.படத்திற்கு நல்ல விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.


நானே நினைத்தாலும் படத்தை நிறுத்த முடியாது

நானே நினைத்தாலும் படத்தை நிறுத்த முடியாது

நானே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. காரணம் படம் ரிலீசுக்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக திருட்டு வி.சி.டி உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.


முடிவில் நியாயம் இல்லை

முடிவில் நியாயம் இல்லை

ஒரு தயாரிப்பாளராக எனக்கும் கடுமையாக பிரச்னைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை


லிங்காவினால் எனக்கும் நஷ்டம் தான்

லிங்காவினால் எனக்கும் நஷ்டம் தான்

இன்னும் சொல்லப்போனால் லிங்கா படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான்தான். அந்த வகையில் நானும் கடுமையாக பாதிக்கப் பட்டேன்.அதை நான் இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை.


ஒரு ஏரியாவிற்காக

ஒரு ஏரியாவிற்காக

செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது" என்று தனது கருத்தை எடுத்துக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் கவிதா பாண்டியன்.


English summary
Producers Council Decision is Wrong - Says Savalae Samali Producer Kavitha Pandiyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil