»   »  பிரச்சினையை திசை திருப்பும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

பிரச்சினையை திசை திருப்பும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1 முதல் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடுவதில்லை என அறிவித்துள்ளது.

பிரிண்ட் முறையில் தியேட்டர்களில் படங்கள் திரையிட்ட போது குறைவான எண்ணிக்கை தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட்டன.

புதிய படங்கள் முக்கிய சென்டர்களில் ஓடி முடிந்த பின் ஷிப்டிங் முறையில் B, C, சென்டர்களில் திரையிடப்படும். இதனை நம்பி இருந்த விநியோகஸ்தர்கள் டிஜிட்டல் முறை அமுலானதால் அழிந்து போனார்கள்.

Producers Council's new protest

டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடும் 12 நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.

படத்தயாரிப்பில் கோடிக்கணக்கில் முதலீடு புரளும் இந்திய சினிமாவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இப்பிரம்மாண்டமான தொழிலைக் கட்டுப்படுத்தும் ஏகபோக முதலாளிகளாக 12 பெரும், சிறு, நிறுவனங்கள் விஸ்வரூப வளர்ச்சியடைந்து எதற்கும் கட்டுப்படாமல் வளர்ந்து இருப்பதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் சங்கங்களே.

டிஜிட்டல் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதெல்லாம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனக் குரல் கொடுக்கும், கொல்லைபுற வழியாக அச் சங்கத்தின் தலைவர்கள் தங்கள் படங்களுக்கு குறைந்த கட்டண சலுகையை பெற்றுக் கொண்டு பிரச்சினையை கிடப்பில் போட்டு விடுவார்கள்.

தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதற்கு காரணம் நடிகரின் சம்பளத்திற்கும் அவர் நடிக்கும் படத்தின் வியாபாரம், வசூல் இரண்டுக்கும் இடையில் நெருங்க முடியாத வித்தியாசம் இருப்பதை தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான நடிகர் சங்க செயலாளர் விஷால் பொது விவாதத்திற்கு கொண்டு வர தயாராக இல்லை.

ஆனால் டிஜிட்டல் கட்டணம் சில ஆயிரங்கள் கூடியதால் சொல்லொணா துயரம் என்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

எது எப்படியோ மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராட முடிவெடுத்திருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அந்த மாநிலங்களில் நடிகர்கள் சம்பளம் வாங்கும் முறையை இங்குள்ள நடிகர்கள் பின் பற்றினாலே தயாரிப்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்குவது குறையும். பிற மாநிலங்களில் படத்தை வியாபாரம் செய்து ரீலீசுக்கு முன் நடிகர்கள் சம்பளத்தை செட்டில் செய்யும் நடைமுறை அமுலுக்கு வரும்.

தயாரிப்பாளர் சங்க அறிக்கை இது:

பிற மாநிலங்களில் தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச்-1ம் தேதி முதல், எங்களின் இந்த நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழக்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தமிழ்த் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த Digital Service Providers - க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.

எனவே தொடர்ந்து அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நமது தமிழ்த் திரையுலகமானது மிக மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை ஒரு கேள்விகுரியாகிவிட்டதை நாம் அனைவரும் அறிந்ததே!! இந்த நிலை மாற, நமது நியாமான பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச்-1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படதினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

English summary
Is the Producers Council shifting focus on various issues by announcing strike against digital projection rates? Here is an analysis.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil