»   »  விஷாலுக்கு கடும் எதிர்ப்பு.... சரத்குமார் அணியை ஆதரிப்பதாக கலைப்புலி தாணு அறிவிப்பு!

விஷாலுக்கு கடும் எதிர்ப்பு.... சரத்குமார் அணியை ஆதரிப்பதாக கலைப்புலி தாணு அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியை ஆதரிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பகிரங்கமாக அறிவித்துள்ளார் கலைப்புலி தாணு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று நடந்தது.

Producers council supports Kalaipuli Thaanu

கூட்டத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமை தாங்கினார்.

செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பாக்யராஜ், ஞானவேல் ராஜா, எர்ணாவூர் நாராயணன், சங்கிலி முருகன், பிரமிடு நடராஜன், அழகன் தமிழ்மணி, சுப்பையா, பெப்சி விஜயன், எஸ்.எஸ்.துரை ராஜ், ஞானவேல், ஜாக்குவார் தங்கம், கரு நாகராஜன் உள்பட ஏராளமான தயாரிப்பாளர்களும், இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

செயற்குழு கூட்டம் முடிந்ததும், எஸ்.தாணு நிருபர்களிடம் கூறுகையில், "நடிகர் சங்க தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. அந்தப் போட்டி, தற்போது, தெருவுக்கு வந்து விட்டது.

விஷால் அணியினர் சினிமாவை கேவலப்படுத்துவது போல் பேசித் திரிகிறார்கள். இந்தப் போட்டியைத் தவிர்ப்பதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட அமைப்புகள் சமாதான முயற்சி மேற்கொண்டன. ஆனால், சமரசத்தை ஏற்க விஷால் மறுத்து எனக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். 'நீங்கள், இந்த பிரச்சினையில் ஏன் தலையிடுகிறீர்கள். சமாதானத்துக்கு நாங்கள் வரமாட்டோம்', என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

நடிகர் சங்க இடத்தை குத்தகைக்கு விட்டு மாதம் 24 லட்சம் ரூபாய் வருமானம் வருவதற்கான ஏற்பாடுகளைத்தானே நடிகர் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர். இதனை விஷால் ஏன் விமர்சிக்கிறார் என்று புரியவில்லை. எதிர்காலத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் விஷால் இணக்கமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. முதல்வரே அழைத்தாலும், சமாதானத்துக்கு வரமாட்டேன் என்று அவர் சொன்னதாக வந்த செய்திக்குக் கூட இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

எனவே, இப்படிப்பட்டவர் தயாரிப்பாளர்களுடன் இணைந்து போக மாட்டார். எனவே நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சரத்குமாரைப் பொறுத்தவரை, பல்வேறு பிரச்சினைகளைக் கடந்த காலங்களில் தீர்த்து வைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதிக்கு வரவேண்டிய பணத்தை வாங்கி கொடுத்தார்.

உத்தம வில்லன், பாயும் புலி, கொம்பன், உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு பிரச்சினைகள் வந்தபோது, தீர்த்து வைத்தார். காஜல் அகர்வால், கஞ்சா கருப்பு, சுருதிஹாசன் பிரச்சினைகளில் தலையிட்டும் தீர்வு கண்டார். எனவே, அவரை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளோம்," என்றார்.

English summary
Kalaipuli Thaanu, President of Producers Council has openly says that the council is supporting Sarathkumar's team in Nadigar Sangam election.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil