»   »  'இறைவி' கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட்? கொந்தளிக்கும் தயாரிப்பாளர் சங்கம்!!

'இறைவி' கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட்? கொந்தளிக்கும் தயாரிப்பாளர் சங்கம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைவி படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் வைத்ததற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தடைவிதிக்குமாறு தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம்.


Producers Council turns against Karthik Subbaraj

முன்னதாக நேற்று இறைவி படம் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அந்தப் படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் காட்சிகள், வசனங்கள் உள்ளதாகக் கூறி கார்த்திக் சுப்பராஜுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதை ஒன்இந்தியா வெளியிட்டது.


இந்த விஷயம் பிற்பகலுக்குள் தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியது. உடனடியாக கார்த்திக் சுப்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


உடனடியாக இதுகுறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு.


இந்தப் படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் காட்சிகள், வசனங்கள் எவை என்பதை இன்று இந்தக் குழு அடையாளம் காண வசதியாக ஆர்கேவி தியேட்டரில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஞானவேல் ராஜா.


மாலை 6 மணிக்கு அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு கார்த்திக் சுப்பராஜ் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Members of Tamil Film Producers Council is discussing action on direcot Karthik Subbaraj for his abusive narration about film producers in Iraivi movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil