»   »  'திரைப்பட நல வாரியம் ஓகே... மற்றதையும் பார்த்துப் பண்ணுங்க!'

'திரைப்பட நல வாரியம் ஓகே... மற்றதையும் பார்த்துப் பண்ணுங்க!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரை உலகில் கடந்த ஒரு மாத காலமாக புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடாமலும் படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சம்பந்தமான எல்லா பணிகளையும் நிறுத்தி வைத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ் திரை உலகத்துக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.

Producers Council urges TN Govt to fulfill all demands

இதற்காக நன்றி தெரிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தமிழ் திரை பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரை உலகின் அனைவர் சார்பிலும் நன்றியினை ரிவித்துக் கொள்கிறோம். மேலும் திரைத்துறை சம்மந்தபட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
The Tamil film producers council has thanked Tamil Nadu govt for setting up Cinema welfare board.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X