»   »  படங்களை வெளியிடுவதில் தடை இல்லை: பின்வாங்கியது தயாரிப்பாளர்கள் சங்கம்

படங்களை வெளியிடுவதில் தடை இல்லை: பின்வாங்கியது தயாரிப்பாளர்கள் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அக்டோபர் 23-ம் தேதியிலிருந்து புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று சில வாரங்களுக்கு முன் தாணு தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானம் நிறைவேற்றினர்.

பெரும்பான்மை தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொள்ளாததால், இப்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டனர்.


Producers council withdrawn its decision

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று இரவு வெளியான அறிக்கை இது:

நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 23.10.2015 முதல் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவை திரும்ப பெறக்கோரி கேட்டுக் கொண்டதற்கிணங்கவும், நமது தயாரிப்பாளர்கள் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் 23.10.2015 முதல் எந்தமொழித் திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவை ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திரையுலகின் அனைத்து பிரிவினரையும் கலந்து பேசி மறு தேதி அறிவிக்கப்படும். நமது சங்க உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு தங்களது மேலான ஒத்துழைப்பை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்".

English summary
The Tamil Film Producers Council has withdrawn its decision not to release new movies from Oct 23rd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil