»   »  தியேட்டர்களில் இனி அரசு நிர்ணயித்த கட்டணம்தான், பார்க்கிங் கட்டணம் கிடையாது! - விஷால்

தியேட்டர்களில் இனி அரசு நிர்ணயித்த கட்டணம்தான், பார்க்கிங் கட்டணம் கிடையாது! - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் இனி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் விஷால் விடுத்துள்ள புதிய அறிவிப்பு:

Producers Councils new rules to Theaters

தமிழகம் முழுவதும் உள்ள இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது.

இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்

கேண்டீன்களில் விலைக்குதான் விற்கவேண்டும்

அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும்

வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்

பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது

விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்

மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இன்று அரசாங்கத்திடமும் இந்த கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

- விஷால் அறிவித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைப்பார்களா?

English summary
Producer Council President Vishal has announced new conditions to theaters from Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil