»   »  திருட்டு விசிடிக்காக தெருவில் இறங்கி தட்டிக் கேட்ட முதல் ஆம்பள விஷால்தான்!- தயாரிப்பாளர் பேச்சு

திருட்டு விசிடிக்காக தெருவில் இறங்கி தட்டிக் கேட்ட முதல் ஆம்பள விஷால்தான்!- தயாரிப்பாளர் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் 'ஆம்பள'. ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் நடித்துள்ளனர்.

சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

'ஆம்பள' பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர்அன்புச் செழியன் ஆகியோர் பாடல்களை வெளியிட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் ஆர்யாவும் பெற்றுக் கொண்டனர்.

குஷ்பு

குஷ்பு

நிகழ்ச்சியில் குஷ்பூ பேசும் போது, "எனக்கு விஷாலை நீண்ட நாட்களாகத் தெரியும். நடிக்க வரும் போதே தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்தை என் கணவர் சுந்தர்.சி இயக்கும்போது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். நான் போனால் கூட யாரோ மாதிரி என்னைப் பார்க்கும் அளவுக்கு; நெருக்கமான நண்பர்களாகி விட்டார்கள்... சுந்தர்.சி, விஷால் இடையில் நான் செல்ல விரும்பவில்லை. நான் போனால் அவர்கள் சுதந்திரம் கெட்டுவிடும் என்று படப்பிடிப்பு பார்க்கக் கூட நான் போகவில்லை. இந்த நட்பால் அவர்கள் சௌகரியமாக உணர்ந்தார்கள். அதனால் இலகுவாக வேலைபார்க்க முடிந்தது.

அழகு ஹன்சிகா

அழகு ஹன்சிகா

எல்லாப் படத்தைவிட ஹன்சிகா இந்தப்படத்தில் அழகாகத் தெரிகிறார். பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வருகிறது. நிச்சயம் இது ஒரு பொங்கல் கொண்டாட்டம்தான். இப்போது சுந்தர்.சியின் மனைவி என்பதில் பெருமைப் படுகிறேன்," என்று கூறி வாழ்த்தினார்.

டி சிவா

டி சிவா

தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, "ஆம்பள' தலைப்பு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் விஷாலுக்குப் பொருந்தும். திருட்டு விசிடிக்காக தெருவில் இறங்கி தட்டிக் கேட்ட முதல் ஆம்பள அவர்.

வழக்கமான தயாரிப்பாளர்களே படம் எடுக்கப் பயப்படும் காலம் இது. பட்ஜெட் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாகப் படம் எடுக்கும்போது தயாரிப்பாளர்களில் இவர் ஆம்பள. தனக்கு மனதில்பட்ட கருத்துக்ளை பயப்படாமல் சொல்வதிலும் இவர் ஆம்பள, " என்றார்.

ஜி கே ரெட்டி

ஜி கே ரெட்டி

தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி பேசும் போது, ''என் மகன் விஷால் கடுமையாக உழைக்கும் பையன்..அவனை வேறுமாதிரி நடிகராக்க விரும்பினேன். ஆனால் 'அவன் இவன்' நடித்த பிறகு அவன் விருப்பத்துக்கு விட்டு விட்டேன். தலையிட வில்லை " என்றார்.

ஆக்ஷன் ஸ்டார்

ஆக்ஷன் ஸ்டார்

மன்சூர்அலிகான் பேசும் போது, "திருட்டு விசிடியை ஒரே நாளில் ஒழித்துக் காட்டுகிறேன். ஜெயிலுக்குப் போகிறவர்கள் என் பின்னால் வாருங்கள்," என்றவர், விஷாலுக்கு 'ஆக்ஷன் ஸ்டார்' பட்டம் வழங்கினார்.

தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, "மீசை வச்சவன் எல்லாம் ஆம்பள இல்லை. நீங்கள் மீசை வைக்கவில்லை என்றாலும் சொன்ன தேதியில் படத்தை அறிவித்து வெளியிடும் நீங்கள் ஆம்பளதான். சுந்தர்.சி இன்னொரு ஆம்பள. இருவருக்கும் வாழ்த்துக்கள்," என்றார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது, " திருட்டு விசிடிக்காக ரோட்டில் இறங்கிப் போராடி அடித்த விஷால் முதல் ஆம்பள. திருட்டு விசிடியை எதிர்க்கும் உணர்வை தந்திருக்கும் விஷால் நிஜ ஆம்பள. "என்றார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் "நாங்கள் முன்பெல்லாம் பூஜையன்றே ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டுத்தான் படம் வெளியிடுவோம்.பல ஆண்டுகளுக்குப்பின் இன்று விஷால் செய்கிறார் வாழ்த்துக்கள்." என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் வைபவ் ரெட்டி, சதிஷ், நடிகை ஹன்சிகா, இயக்குநர்கள் சுசீந்திரன், திரு, தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், முருகராஜ், கே.ஈ ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாஆகியோரும் பேசினார்கள்.

English summary
Producers, directors hailed Vishal as a brave man who is fighting against video piracy.
Please Wait while comments are loading...