twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் வெற்றி... சந்தேகம் கிளப்பும் தயாரிப்பாளர்கள்!

    By Shankar
    |

    நடிகர் விஷால் தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டாலும், அந்த வெற்றி சந்தேகத்துக்குரியதாகவே திரையுலகினரால் பார்க்கப்படுகிறது.

    இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 1059 என அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் இவ்வளவு வாக்குகள் பதிவாயினவா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் தேர்தல் நடந்த இடத்தில் இருந்த எதிரணியினர். வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோதே மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாம்.

    Producers doubting on Vishal team's victory

    இந்தத் தேர்தல் தொழில்முறை தயாரிப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களாக மாறிய நடிகர்களுக்குமான போட்டியாகத்தான் பார்க்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் தயாரிப்பாளர்கள் தரப்பு கிட்டத்தட்ட 600 வாக்குகளைப் பெற்றுள்ளது. விஷாலோ 476 வாக்குகள்தான் பெற்றுள்ளார்.

    கடந்த தேர்தலில் கலைப்புலி எஸ் தாணு போட்டியிட்டபோது பதிவான வாக்குகள் 900. அவற்றில் 700 வாக்குகளை தாணு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பெருவாரியான வாக்குகளை விஷால் பெறவில்லை. தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இரண்டாகப் பிரிந்து நின்றதே தோல்விக்குக் காரணம் என இப்போது ஆதங்கப்படுகிறார்கள் விஷாலை எதிர்த்த இரு அணியைச் சேர்ந்தவர்களும்.

    இதைத்தான் ஆரம்பத்திலிருந்த கலைப்புலி தாணுவும் இன்னும் சிலரும் சொல்லிக் கொண்டே இருந்தனர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, விஷாலுக்கு எதிராக ஒரே அணியாக நிற்கலாம் என்றார் தாணு. ஆனால் யாரும் கேட்கவில்லை.

    'முதலில் தேர்தல் நடத்தத் தேர்வு செய்யப்பட்ட இடம் ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டர். ஆனால், திடீரென்று கந்தசாமி நாயுடு கல்லூரிக்கு மாற்றிவிட்டனர். அதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை' என்று சந்தேகம் கிளப்புகிறார்கள் இன்னும் சிலர்.

    வாக்குப் பதிவு நடந்த நேரத்தில் விஷால் அணியினருக்கு வேண்டப்பட்ட இளைஞர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக வாக்குப் பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு விஷால் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் மூன்று முறை தேர்தல் அதிகாரியை தனிப்பட்ட முறையில் போய்ப் பார்த்ததாக ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

    எல்லாவற்றுக்கும் மேல்... விஷால் தரப்பின் கணிசமான கவனிப்பு. கொடுக்கும் இடத்தில் இருக்கும் முதலாளிகள் நாங்கள் என சொல்லிக் கொண்டிருந்த தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோர் அங்கும் கைநீட்டியதாகச் சொல்கிறார்கள். உண்மை அந்த பராபரனுக்கே வெளிச்சம் என்கிறார்கள்.

    இதற்கெல்லாம் விஷால் தரப்பு பதில் என்னவோ?

    English summary
    Here are few doubts raised by Vishal's opposition team candidates in producers council election results.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X