»   »  மெர்சல்... தமிழ்நாடு உரிமை மட்டும் ரூ 75 கோடிக்கு விற்பனை?

மெர்சல்... தமிழ்நாடு உரிமை மட்டும் ரூ 75 கோடிக்கு விற்பனை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் படமான மெர்சல், விஜய்யின் கேரியரில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய விலைக்குப் போயுள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மெர்சல் படத்தில் விஜய்க்கு மொத்தம் 3 வேடங்கள். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால்.

Producers targets Rs 75 cr for Mersal

படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

ஏற்கெனவே அமெரிக்க உரிமையை அட்மஸ் நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இப்போது தமிழ்நாடு உரிமைக்கு பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

தமிழக உரிமையை மட்டும் ரூ 75 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் அதிகமான வசூல் செய்த விஜய் படங்கள் துப்பாக்கி, தெறிதான்.

சுமாரான திரைக்கதை உள்ள விஜய் படங்கள கூட வசூலில் சோடை போனதில்லை என்பதால் மெர்சல் படத்தின் தமிழ்நாடு உரிமையை அதிக விலைக்கு விற்க தயாரிப்பு தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.

English summary
The producers of Vijay's Mersal have targeted Rs 75 cr for the movie's Tamil Nadu rights
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil