»   »  டிக்கெட் விலை அதிகரிக்காமல் இருக்க ரஜினி வழியைப் பின்பற்ற வேண்டும்!- தயாரிப்பாளர்கள்

டிக்கெட் விலை அதிகரிக்காமல் இருக்க ரஜினி வழியைப் பின்பற்ற வேண்டும்!- தயாரிப்பாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், ரஜினிகாந்தின் ஃபார்முலாதான் சரியான வழி என்று தயாரிப்பாளர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

அரசு கெடுபிடி காரணமாக தெறி படத்துக்கு டிக்கெட் விலை அதிகம் வைத்து விற்க முடியாது என்று கூறி, படத்தை திரையிட செங்கல்பட்டு ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவிட்டனர்.

Producers urge top heroes to follow Rajinikanth
இந்தப் பிரச்சினை படம் வெளியான இன்று காலை வரை தொடர்ந்தது. எனவே தயாரிப்பாளர் தாணு தன் சொந்தப் பொறுப்பில் படத்தை வெளியிட்டுவிட்டார்.

பெரிய ஹீரோக்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரும் தொகை தரப்படுவதால்தான், போட்ட முதலீட்டை சீக்கிரம் எடுக்க தியேட்டர்களில் அதிகக் கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது என்று இப்போது தயாரிப்பாளர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

இதை எப்படித் தடுக்கலாம்?

இதற்கு தயாரிப்பாளர்கள் சொல்லும் யோசனை இது:

ரஜினிகாந்த் வழிதான் இதற்கு ஒரே தீர்வு. அவர் முன்பெல்லாம் தனது படங்களுக்கு சம்பளம் என எதுவும் வாங்கமாட்டார். என்எஸ்ஸி ஏரியா உரிமையை மட்டும் பெற்றுக் கொள்வார். சில நேரங்களில் பிறமொழி உரிமையும் அவருக்கே வழங்கப்படும். இதில் வரும் லாப நஷ்டங்களை அவரே ஏற்றுக் கொள்வார்.

இப்போது முன்னணியில் உள்ள இளம் நடிகர்களும் ரஜினி வழியைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் திரையரங்குகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது குறையும்," என்கிறார்கள்.

ரஜினி தனது இந்த வழக்கத்தை சிவாஜி படத்திலிருந்து மாற்றிக் கொண்டார் என்பது இந்தத் தயாரிப்பாளர்களுக்குத் தெரியாதா?

English summary
Producers of Tamil Film Industry now urged top heroes to share the profit and loss like Rajinikanth did in the past to avoid high ticket prices in Theaters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil