»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர், நடிகைகள் சம்பளம் உட்பட அவர்கள் தொடர்பான செலவு விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தவிவகாரத்தில் நடிகர் சங்கத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஐந்து நாட்களுக்கு குறைவாக படப்பிடிப்பு நடந்துள்ள படங்களின் படப்பிடிப்புக்கள் காலவரையின்றி ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு, மேக்கப் விஷயங்களில் புதுகட்டுப்பாடுகளைதயாரிப்பாளர்கள் விதித்துள்ளனர்.

சம்பளக் குறைப்பு செய்ய வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளையடுத்து தென்னிந்தியநடிகர் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் சம்பளக்குறைப்பு பற்றி ஏதும்பேசப்படவில்லை. மாறாக தயாரிப்பாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம்சென்னையில் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

இது பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர் நிருபர்களிடம் கூறியதாவது.

சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். நடிகர், நடிகைகள்கூட்டத்தில் நாங்கள் கேட்டது பற்றி ஆலோசிக்காமல் , அவர்களுக்கு சாதகமான பல முடிவுகளை எடுத்துள்ளனர்.இந்த முடிவுகள் எங்களுக்கு வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் தொடர்ந்து படமெடுப்பதென்றால் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். எங்கள் சங்க முடிவிற்கு கட்டுப்பட்டு தொழில் செய்பவர்களை மட்டுமே தயாரிப்பாளர்கள்அங்கீகரிப்பார்கள். தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஐந்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்த படங்களைத் தவிர மற்ற படங்களின் படப்பிடிப்புகள் மறு அறிவிப்புவரும் வரை காலவரையின்றி ரத்து செய்யப்படுகின்றது.

படக் கம்பெனி ஏற்பாடு செய்துள்ள மேக்கப்மேன், உடையலங்கார நிபுணர்களை மட்டுமே நடிகர், நடிகைகள்பயன்படுத்த வேண்டும். தாங்களே மேக்கப்மேன், உடையலங்கார நிபுணர்களை அழைத்து வந்தால் அவர்களுக்குஉரிய சம்பளம், பேட்டா, பயணச் செலவுகளை நடிகர், நடிகைகளே கொடுக்க வேண்டும். படக் கம்பெனிகொடுக்காது.

நடிகர், நடிகைகள் ஒப்புக்கொண்ட படம் ஏதாவது காரணத்தால் தொடர முடியாமல் போனால், அதற்கு அடுத்துகால்ஷீட் கொடுத்துள்ள தயாரிப்பாளரின் படத்தில் தான் நடிக்க வேண்டும். அவர்கள் இஷ்டத்திற்கு மற்றதயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கக் கூடாது.

எந்த நடிகர், நடிகைக்கும் படத்தில் நடிக்க பேசப்பட்ட தொகையில் பத்து சதவீதம் மட்டுமே முன் பணம்கொடுக்கப்படும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நாற்பது சதவீதம் தரப்படும், மீதமுள்ள ஐம்பதுசதவீதம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகு தான் கொடுக்கப்படும்.

நடிகர், நடிகைகள் குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும்.

படம் பூஜை போடப்பட்ட அன்றே ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜீத் படங்கள் வியாபாரம் ஆகிவிடுவதால்அவர்களை இந்தத் தீர்மானங்கள் கட்டுப்படுத்தாது. மற்ற நடிக, நடிகர்கள் நடிக்கும் படத்தின் வியாபாரத்தைபொறுத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும்.

ஏதாவது காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனால் அட்வான்ஸ் பணத்தை நடிகர், நடிகைகள் திரும்பகொடுத்துவிட வேண்டும். அப்படிக் கொடுக்காத நடிகர், நடிகைகளை மற்ற படத்தயாரிப்பாளர்கள் தங்கள்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது.

தயாரிப்பாளர் புதுப் படத்தை துவங்கும்பொழுது அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்பந்தம்செய்துவிடவேண்டும். ஒப்பந்த நகல்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் காட்டப்பட்ட பிறகே படப்பிடிப்பை துவங்கவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், தயாரிப்பளார்களின் கோரிக்கைகள் நியாமானவை என்று நடிகர், நடிகைகள் சங்கத்தில் சிலர்ஏற்றுக்கொண்டனர். திங்கள் கிழமை இரவு தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பிலிருந்து நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் விஷயத்தை விவகாரமாக்கியிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil