கவினின் லிஃப்ட் ரிலீஸ் எப்போ....தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அப்டேட் ?
சென்னை : பிக்பாஸ் சீசன் 2 வில் பங்கேற்று பிரபலமான கவின், நெல்சன் திலீப்குமாரின் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். விஜய்யை வைத்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
அத்துடன் அறிமுக இயக்குனரான வினீத் இயக்கும் லிஃப்ட் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே முடிந்து விட்டது.

ஓராண்டாக காத்திருக்கும் லிஃப்ட்
போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் முடிந்த நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யும் உரிமத்தை வாங்கியது லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்.

லிஃப்ட் ஓடிடி ரிலீசா
ஆனால் மீண்டும் கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டதால், படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என தெரியாததால் பல படங்கள் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இதே போல் லிஃப்ட் படமும் ஓடிடி.,க்கு செல்ல உள்ளதாக தகவல் பரவியது.

லிப்ரா வெளியிட்ட அதிரடி அப்டேட்
இந்நிலையில் லிஃப்ட் படம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என திட்டவட்டமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதுவும் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்த பிறகு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். ஓடிடி ரிலீஸ் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

தியேட்டர் ரிலீசை ஊக்குவிக்கும்
அத்துடன் கூடுதல் தகவலாக சவுண்ட் இன்ஜினியர் டபாஸ் நாயக் அதிக கவனத்துடன் சவுண்ட் லெவலுக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். தியேட்டர்களில் படங்களை திரையிடுவதை ஊக்குவிப்பதாக இந்த படம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











