»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சங்கக் கடனை அடைக்க வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்க வளர்ச்சிக்காக பல வருடங்களுக்கு முன் வங்கியிலிருந்து கடன் வாங்கப்பட்டது. அந்த கடன் இப்போது வட்டி சேர்த்து சுமார் நான்கு கோடிரூபாய் வரை ஆகி விட்டது. இந்த கடனை எப்படி அடைப்பது என்பது பற்றி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடிகர் சங்கக் கட்டடத்தில் நடந்த நடிகர் சங்ககூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், நடிகர் சங்கத்தின் தலைவர் விஜயகாந்தின் அழைப்பை ஏற்று பெரும்பாலான நடிக, நடிகையர்கள்வந்திருந்தனர்.

கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக அனைத்து நடிக, நடிகைகள் கலந்து கொள்ளும் நட்சத்திர கலை விழாவை வெளிநாடுகளில் நடத்துவதுஎன்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil