»   »  அனேகன் ஓடும் அரங்குகளை முற்றுகையிடுவோம் - சலவைத் தொழிலாளர்கள் அறிவிப்பு

அனேகன் ஓடும் அரங்குகளை முற்றுகையிடுவோம் - சலவைத் தொழிலாளர்கள் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அனேகன் படம் ஓடும் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்று சலவைத் தொழிலாளர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

உடன்குடி வில்லிக்குடியிருப்பில் திருகுறிப்பு தொண்டர் மகாசபையின் சங்க செயல் விளக்க கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில தலைவர் மாரிச்செல்வம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாயாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினர்.

கூட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் சலவை தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. அதை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல் 'அனேகன்' படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

ஏற்கெனவே மதுரையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் படத்துக்கு எதிராக மதுரை போலீசாரிடம் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம்.

English summary
Some of the Washer men from Tuticorin have announced protest against Dhanush's Anegan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil