twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதுமா.. குஷ்பு விளாசல் #PSBB

    |

    சென்னை: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் தொடர்ச்சியாக அளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை எழுப்பி உள்ளது.

    அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் பொது மக்களும் தொடர்ந்து தங்களின் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

    சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ள நிலையில், அதுமட்டும் போதுமா? என நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாலியல் குற்றச்சாட்டு

    பாலியல் குற்றச்சாட்டு

    சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வெடித்த சர்ச்சையை தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    ராஜகோபாலன் சஸ்பெண்ட்

    ராஜகோபாலன் சஸ்பெண்ட்

    ஆன்லைன் வகுப்புகளுக்கா உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் க்ரூப்கள் மூலமாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டுகள், ஆபாச மெசேஜ்கள் என அடுக்கடுக்கான ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் குவிந்த நிலையில், கண்டனங்கள் குவியத் தொடங்கின. இந்நிலையில், ராஜகோபாலனை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

    ஷாக் ஆகிட்டேன்

    ஷாக் ஆகிட்டேன்

    திமுக எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் ராமதாஸ், தயாநிதி மாறன், நடிகை லக்‌ஷ்மி பிரியா என பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் PSBB பள்ளி விவாகாரம் தொடர்பான செய்தியை கேட்டு ஷாக் ஆகிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

    சஸ்பெண்ட் மட்டும் போதாது

    சஸ்பெண்ட் மட்டும் போதாது

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியரை வெறும் சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது என்றும், உடனடியாக அவரிடம் உரிய விசாரணையை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனின் செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    பள்ளிக்கு எப்படி அனுப்புவது

    பள்ளிக்கு எப்படி அனுப்புவது

    விசாரணை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தைகள் பயத்துடனே பள்ளிக்கு செல்ல முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த விவாகரத்தை தீவிரமாக கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு தெரிவித்துள்ளார்.

    English summary
    Khushbu tweet, “It's shocking to read about sexual harassment in PSBB school in chennai. Suspending the teacher alone will not help,immediate inquiry n stern action, if found guilty,should be taken.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X