For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகர்களின் தற்கொலைகளைத் தடுக்க கவுன்சலிங்!- நடிகர் சங்க கூட்டத்தில் அறிவிப்பு

By Shankar
|

சென்னை: நடிகர்களின் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு மனோதத்துவ முறையில் ஆலோசனை அளிக்கப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் குரு தட்சணை திட்டம் மற்றும் இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

Psychological counselling for Nadigar Sangam members

விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் சுஹாசினி, ஸ்ரீபிரியா போன்ற ஏராளமான விருந்தினர்களும் கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது:

வெளியூரிலிருந்து இன்றுதான் இங்கு வந்தேன். நடிகர் சாய் பிரசாந்த்தின் துர்மரணச் செய்தி, மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியது. மருத்துவத்தை விட மேலானது மனோதத்துவ முறையிலான சிகிச்சை. இந்த நடிகர் சங்கத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயம், நமது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மனோதத்துவ முறையிலான சிகிச்சை மையம் அமையும் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்.

இந்த ஆறு மாத காலத்தில், ஆறு வருடப் பணியை செய்து முடித்திருக்கிறோம். உறுப்பினர்கள் எல்லோரும், தான் ஒரு நடிகன் என்பதை மறந்து சிறப்பாக வேலை செய்தார்கள்.

நடிகர் சங்கத்தின் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும்போது நான் இதெல்லாம் முடியுமா என்று யோசித்தபோது, இளைய தலைமுறையினர் என்னிடம், இலக்கை நிர்ணயம் செய்தபிறகு அதை நோக்கி பயணம் செய்வோம் என்று கூறினார்கள். அதையே இப்போது பின்பற்றுகிறோம். சங்கத்தின் முதல் திட்டம் 'குருதட்சணை திட்டம்'. முதலில் இது ஓய்வூதியம் என்றுதான் இருந்தது. நமக்கு முன் வந்த நமக்கு குருவாக இருந்த சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் என்பதற்குப் பதிலாக குரு தட்சணை என்று கொடுப்போம் என வடிவமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம்.

நோய் என்பதற்கு வயது வரம்பு கிடையாது. எனவே சங்க உறுப்பினர்கள் 3500 பேருக்கும் மருத்துவ வசதி செய்து கொடுக்கிறேன் என்று ஏசிஎஸ் உறுதிகொடுத்தார். மேலும் அவர் இந்த 3500 பேரில், 3000 உறுப்பினர்கள், கலைஞர்கள் இதைப் பயன்படுத்தாமல் ஆரோக்கியமாக இருந்தால் நான் மிக்க மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறினார். மேலும் அவர், மாதம் 1000 ரூபாய் வீதம் 150 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பென்சன் வழங்குவேன் என்றும் பிரசவத்துக்கு இலவசம் என்றும், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் இதயம் தொடர்பான சிகிச்சைக்கு மருந்துக்கு மட்டும் செலவு செய்தால் போதும், சிகிச்சை முற்றிலும் இலவசமாக தரப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதற்கு நான் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால் பேசியது:

மூன்றரை வருடங்களுக்கு முன்னர், நான் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம், இன்று இந்த பதவியின் மூலம் சாத்தியமானது. இந்தப் பதவியின் வெற்றியை அனுபவிப்பது என்பது ஒவ்வொரு நிகழ்வும் நடக்கும்போது மட்டுமே நினைவுக்கு வருகிறது. வருகின்ற 20-ம் தேதி நமது சங்க கட்டடத்தின் மாதிரியை நீங்கள் எல்லாரும் பார்க்க இருக்கிறீர்கள். இதற்காக இரண்டு நபர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.முதலாவதாக பலவிதமான பிரச்னைகளையும் தாண்டி இதை முடித்துக் கொடுத்த ஐசரி கணேஷ். இரண்டாவதாக நமது உறுப்பினர்கள். நமது உறுப்பினர்களால் மட்டுமே 6வருடத்தில் நாம் செய்யக்கூடிய வேலையை 4மாதத்தில் செய்துமுடித்தோம். மூத்த தலைமுறை நடிகர்கள், நடிகைகளுடன் எப்போதும் நாங்கள் இணைந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இந்தக் கட்டடம் அதற்கு முன்மாதியாக இருக்கும்.

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் எல்லோருடைய குடும்பத்திலும் நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். சக நடிகனாக என்னுடைய உத்தரவாதமாக இதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்," என்று பேசினார்.

பொருளாளர் கார்த்தி:

இந்த வெற்றிக் கூட்டணியை மூத்த தலைமுறையினரின் ஆசீர்வாதமாகவே நான் கருதுகிறேன். தலைவர் நாசர் அவர்கள் பேசும்போது சொல்வார், 'சங்கம் என்பது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும் இடமாக இருந்தால் நலமாக இருக்கும்' என்று. அது சங்க கட்டிடத்தின் மூலம் கூடிய விரைவில் சாத்தியமாகும். கட்டிடக்குழு அமைத்தாயிற்று. வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் முதற்காரணமாக இருக்கும் ஐசரிகணேஷுக்கு எங்கள் நன்றிகள்.

குருதட்சணை திட்டத்தின் மூலம் ஆரம்பித்த தகவல் சேகரிப்பின் மூலம் அனேக

தகவல்களை (வயதுவாரியாக) தெரிந்து கொண்டோம். உறுப்பினர்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்துவைக்க சங்கம் எப்போதும் தயாராக இருக்கின்றது. சங்கத்திற்கான கட்டிடம் தயாரானதும் நாம் இன்னும் நிறைய விஷயங்களை மீண்டும் நாம் பேசலாம்,நன்றி," என்றார்.

English summary
Nadigar Sangam has announced the psychological counselling for its members to avoid suicides.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more