twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கொம்பன்' திரைப்படத்துக்கு மறு தணிக்கை தேவை! - டாக்டர் கிருஷ்ணசாமி

    By Shankar
    |

    மதுரை: நடிகர் கார்த்தி நடித்த 'கொம்பன்' திரைப்படத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வசனங்கள் இருப்பதால் அதனை மறுதணிக்கை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

    மதுரையில் செவ்வாய்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விரைவில் திரைக்கு வரவிருக்கும் நடிகர் கார்த்தி - லட்சுமி மேனன் நடித்த 'கொம்பன்' திரைப் படத்தில் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தியும், சிறுபான்மை மக்களை தாழ்த்தியும் வசனம் உள்ளதாக அறிகிறோம். அந்த திரைப்படத் தணிக்கை குழு அனுமதியளித்துள்ளது.

    PT leader Krishnaswamy demands re censor for Komban

    அது தவறானது. அந்த திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக திரைப்படத் தணிக்கை குழுவினரை சந்திக்க உள்ளோம்," என்றார்.

    கொம்பன் படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரைக்கு வருகிறது.

    மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்தில் சமீபகாலமாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் கொடூரமான தாக்குதல் மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாகி உயிரிழப்புகள் அதிகமாகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    தென் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படாத தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. எனவே, குடியரசு விழா மற்றும் சுதந்திர தினத்தை தவிர மாணவர்கள் வேறு விழாக்களைக் கொண்டாட கல்வித் துறை அனுமதிக்க கூடாது. மீறி கொண்டாடும் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

    English summary
    Puthiya Tamizhagam party leader Dr Krishnaswamy urged re censor for Karthi's Komban movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X