»   »  சிவகார்த்திகேயன் இளம் சூப்பர்ஸ்டாராம்: ரஜினி ரசிகர்களே, உடனே கிளம்பிடாதீங்கய்யா!

சிவகார்த்திகேயன் இளம் சூப்பர்ஸ்டாராம்: ரஜினி ரசிகர்களே, உடனே கிளம்பிடாதீங்கய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருக்கிற பஞ்சாயத்து போதாது என்று தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என்று அழைத்துள்ளார்.

எந்த பஞ்சாயத்து ஓய்ந்தாலும் ஓயும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து மட்டுமே என்றைக்குமே ஓயாது. அன்று, இன்று, என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார் அது எங்கள் தலைவர் தான் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மீறி யாராவது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டால் வறுத்தெடுக்கிறார்கள்.

இளம் சூப்பர் ஸ்டார்

இளம் சூப்பர் ஸ்டார்

தம்பி ராமையாவின் மகன் உமபாதி ஹீரோவாக அறிமுகமாகும் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

அதாகப்பட்டது மகாஜனங்களே இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ஏ.எல். விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கள் ஸ்டார்

மக்கள் ஸ்டார்

இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பேரரசோ சிவகார்த்திகேயனை மக்கள் ஸ்டார் என்றார். ஆளாளுக்கு புதுப்புது பட்டம் கொடுப்பதை பார்த்த சிவகார்த்திகேயனோ தனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்றார்.

மனிதன்

மனிதன்

எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். ஒரு சாதாரண மனிதனாக ரசிகர்களை மகிழ்வித்தால் அதுவே எனக்கு போதும் என்று அடக்கமாக பேசினார் சிவகார்த்திகேயன்.

English summary
Producer PT Selva Kumar has given Ilam super star title to actor Sivakarthikeyan. But the Velaikkaran star humbly refused to accept any titles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil