twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடர் சர்ச்சையை ஏற்படுத்தும் பப்ளிக் பட ஸ்னீக் பீக்.. வசமாக சிக்கினாரா சமுத்திரக்கனி?

    |

    சென்னை: சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா போன்ற பலரும் நடித்து, வெளிவர இருக்கும் திரைப்படம் தான் பப்ளிக்.

    இப்படத்தை இயக்கியுள்ளார் ரா.பரமன். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்களும், ஸ்னீக்பீக்கும் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த படத்தின் ஸ்னீக்பீக்குகள் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த காரணமாக இருந்தது, படத்தின் வசனங்களும், காட்சியின் வடிவமைப்பும் ஆகும்.

    அடிதூள்... செம குத்தாக வெளியான பீஸ்ட் அரபிக் குத்து...வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள் அடிதூள்... செம குத்தாக வெளியான பீஸ்ட் அரபிக் குத்து...வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்

    தலைவர்கள் படம் இல்லை

    தலைவர்கள் படம் இல்லை

    தமிழ் சினிமாவில் பல அரசியல் சார்ந்த கதைகள் வெளிவந்துள்ளது, ஆனால் இந்த படம் அரசியல் தொண்டர்களின் மன நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும் என்று கூறுகின்றனர். இந்த படத்தின் முதல் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன், பாரதிதாசன், நெடுஞ்செழியன், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட படங்களும் இடம் பெற்றிருந்தன. அதேசமயம் பெரியார், அண்ணா போன்ற மூத்த தலைவர்களின் படம் இல்லாமல் இருந்ததனால். அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனமும் எழுந்தது.

    விளக்கமளித்த இயக்குனர்

    விளக்கமளித்த இயக்குனர்

    இந்த படத்தின் மீது பேசப்படும் சர்ச்சையை கேள்விப்பட்ட படத்தின் இயக்குனர் ரா.பரமன் தனது தரப்பிலிருந்து விளக்கமும் அளித்தார். அதாவது சமூக மாற்றம் என்பது பெரியாரால் மட்டும் ஏற்பட்டுவிடவில்லை, அப்படிச் சொன்னால் அதை பெரியாரே ஏற்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

    ஸ்னீக்பீக் சலசலப்பு

    ஸ்னீக்பீக் சலசலப்பு

    இப்படத்தின் ஸ்னீக்பீக் 1இல் பெட்ரோல் விலையை எதிர்த்து போராட்டம் நடத்துவது போல சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஸ்னீக்பீக் 2 இல் தமிழ் தெரியாத ஒரு பெண்ணுக்கு கட்சிப் பெயரை சொல்லித் தருவது போலவும், தமிழ் தெரியாதவர்களுக்கு எப்படி சீட் வாங்கித் தருவது போன்று வசனமும் இடம்பெற்றிருக்கிறது. இதை தொடர்ந்து வெளிவந்த ஸ்னீக்பீக் 3 இல் திருக்குறளை எழுதினது திருவள்ளுவரா என்று கேட்பது போல வசனங்கள் அமைந்திருப்பது. இப்படத்திற்கான அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    விளக்கம் அளித்த இயக்குனர்

    விளக்கம் அளித்த இயக்குனர்

    இந்த படம் குறித்து இயக்குனர் ரா.பரமன் கூறியபோது, இந்த படம் மக்களுக்கான அரசியலை பேசும் படமாக இருக்கும் குறிப்பாக அரசியல் திரைப்படம் என்றாலே கட்சித் தலைவர்கள் குறித்த படமாக இருக்கும். ஆனால் பப்ளிக் திரைப்படம் கட்சித் தொண்டர்களின் நிலையை வெளிப்படையாக வெளிப்படுத்துவதாக இருக்கும். மற்றபடி எந்தவொரு கட்சியையும் ஆதரித்தும், விமர்சித்தும் இந்த படம் உருவாக்கப் படவில்லை. இந்த படம் முழுக்க முழுக்க சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால், அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

    English summary
    Public Movie Sneak Peek Made controversy Samuthrakani in Trouble?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X