ஜெய்-சுரபியின் 'புகழ்' விஜய் ரசிகர்களுக்கான விருந்து

By Manjula

சென்னை: நீண்ட மாதங்கள் கழித்து ஜெய்யின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் புகழ். ஜெய்யுடன் இணைந்து கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சுரபி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

உதயம் என்எச் 4 மணிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புகழ் படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் தேர்தல் களைகட்டிவரும் சூழ்நிலையில் அரசியலை மையமாகக் கொண்டு, இப்படம் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று வெளியாகியிருக்கும் புகழ் ஜெய்க்கு புகழைக் கொடுக்குமா? என்று பார்க்கலாம்.

தேன் தேன்

குருவி படத்தில் இடம்பெற்ற தேன் தேன் பாடல் இப்படத்தில் இடம்பெறுவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

வசனங்கள் அழுத்தம்

அரசியல் படமாக வெளியாகியிருக்கும் புகழ் படத்தில் சில அழுத்தமான வசனங்கள் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார் சதீஷ்.

இளைஞர்களுக்கான

புகழ் நல்ல சமூகக் கருத்துடன் வெளியாகியிருக்கும் இளைஞர்களுக்கான படம் என்று பாராட்டியிருக்கிறார் பிரவீன்.

ஜெய்

ஜெய்யை இப்படம் மீட்டுக்கொண்டு வந்திருப்பதாக மணியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் புகழ் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X