»   »  விஜயின் ‘புலி’ ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாக இருக்கும்...: நட்டி

விஜயின் ‘புலி’ ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாக இருக்கும்...: நட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்து வரும் புலி திரைப்படம் ஆச்சர்யங்கள் நிறைந்த சிறந்த திரைப்படமாக இருக்கும் என அப்படத்தின் ஒளிப்பதிவாளரான நட்டி தெரிவித்துள்ளார்.

‘மிளகா', ‘சதுரங்க வேட்டை' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நட்ராஜ், தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். நட்டி தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த யூத் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

வாய்ப்புக் கிடைத்தால்...

வாய்ப்புக் கிடைத்தால்...

இந்நிலையில், தனது புலி பட அனுபவம் குறித்து நட்டி கூறுகையில், ‘நான் புலி படத்தின் எந்த விஷயத்தையும் சொல்லக் கூடாத கட்டாயத்தில் இருக்கிறேன். தயாரிப்பாளரும், இயக்குனரும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் படத்தைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வேன்.

வெற்றிப் படமாகும்...

வெற்றிப் படமாகும்...

ஆனால் நிச்சயம் இப்படம் ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாகவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும். எனக்கு இப்படத்தில் ஒளிப்பதிவு வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஸ்ரீதேவி...

மீண்டும் ஸ்ரீதேவி...

சிம்புதேவன் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் தமிழில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

இப்படத்தில் விஜய் மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார் என்றும், ஒரு கதாபாத்திரம் குள்ளமான மனிதர் என்றும், முன் ஜென்மக் கதை என்றும் இப்படத்தைப் பற்றி பல்வேறு யூகங்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நட்டியின் பேட்டி புலி படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

English summary
Cinematographer Nataraj says Puli as a blockbuster, Outstanding, Brahmanda Film – Lots of Surprise is their in Puli
Please Wait while comments are loading...