»   »  'புலி முதல் வார வசூல் ரூ 71 கோடி'.... தயாரிப்பாளர் அறிவிப்பு!

'புலி முதல் வார வசூல் ரூ 71 கோடி'.... தயாரிப்பாளர் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல்வேறு கடும் விமர்சனங்களைச் சந்தித்த விஜய்யின் புலி படம் முதல் வாரத்தில் ரூ. 71 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தைத் தயாரித்த எஸ்.கே.டி. நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் - புலி.


Puli box office: Official announcement

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குப் ஈடு கொடுக்காததால் படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் வரவில்லை. முதல் வாரத்துக்குப் பிறகு புலி படம் சில பெரிய திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.


இந்நிலையில் புலி படத்தின் முதல் வார வசூல் பற்றி அதன் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


புலி படத்தைத் தயாரித்த எஸ்.கே.டி. நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘உலக அளவிலான புலி படத்தின் முதல் வார வசூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பலதரப்பட்ட விமரிசனங்களையும் கடந்து புலி படம் முதல் வாரத்தில் ரூ. 71 கோடி வசூலித்துள்ளது' என்று அறிவித்துள்ளது.


அப்டியா!!

English summary
The Producers of Puli movie officially announced that the Vijay starrer has collected Rs 71 cr at the end of first week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil