»   »  "பெண் புலி"யின் கேரக்டர் என்ன தெரியுமா.. வாங்க வந்து படிங்க!

"பெண் புலி"யின் கேரக்டர் என்ன தெரியுமா.. வாங்க வந்து படிங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் புலி படத்தில் நடிகை ஹன்சிகாவின் கேரக்டர் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் முதன்முறையாக சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு புலி படத்தில் நடித்திருக்கிறார்.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து சுதீப், ஸ்ரீதேவி, சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர், தமிழ்நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.படத்தில் ஹன்சிகா மற்றும் சுருதிஹாசன் என இரு நாயகிகள் உள்ளனர் , இவர்கள் இருவரும் எந்த மாதிரியான வேடத்தில் நடித்திருக்கின்றனர் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


தற்போது ஹன்சிகாவின் கேரக்டர் வெளியாகி விட்டது படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக ஹன்சிகா நடித்திருக்கிறார், ஹன்சிகாவின் அண்ணனாக சுதீப் நடித்திருக்கிறார். எனில் படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடித்திருக்கிறார்.


புலி படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நடிகை ஹன்சிகா விஜய்க்கு பின்புறமாக பயத்துடன் நிற்பது போன்று இருக்கிறது. அதாவது அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது கொடிய காட்டு மிருகம் ஒன்றிடம் இருந்து ஹன்சிகாவை விஜய் காப்பது போன்று உள்ளது.


புலி படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி நடைபெறலாம் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 15லும் படத்தை ஆகஸ்ட் மாதம் 27 ம் தேதியிலும் புலி படக்குழுவினர் வெளியிட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


English summary
Puli : Hansika Motwani's Character Revealed ,Hansika Motwani plays the daughter of Sridevi, who is the queen of an empire in "Puli". She is also the sister of Kiccha Sudeep.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil