»   »  இப்டியும் செலவில்லாம ஈஸியா வீட்லயே ‘புலி’யைப் பார்க்கலாமாம் பாஸ்!

இப்டியும் செலவில்லாம ஈஸியா வீட்லயே ‘புலி’யைப் பார்க்கலாமாம் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி நடித்த புலி திரைப்படம் கடந்தவாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Select City
Buy Marla Puli (A) Tickets

புலி படம் ரிலீசிற்கு முன்னதாக திடீரென விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் 5 ஆண்டுகளாக விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.


வெறும் வாய் கிடைத்தாலே மெல்பவர்கள், அவல் கிடைத்தால் விடுவார்களா என்ன? புலி ரிலீசையும், விஜய் வீட்டு ரெய்டையும் சேர்த்து மீம்ஸ்கள் தயாரித்து இணையத்தில் உலா வர விட்டுள்ளனர் சில குறும்புக்கார நெட்டிசன்கள்.


இதோ அவற்றில் சில உங்களுக்காக...


வரி கட்டாத புலி...

வரி கட்டாத புலி...

புலி ஆடியோ ரிலீசில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் அப்படம் குறித்து தனது ஸ்டைலில் அடுக்குமொழியில் பாராட்டி தள்ளி இருந்தார். அது அப்போதே வேறு விதமாக மீம்ஸாக வெளி வந்தது. இந்நிலையில் தற்போது விஜய் வீட்டு ரெய்டையும் டி.ஆர். பேச்சை வைத்தே இப்படி கலாய்த்துள்ளார்கள்.


அடிச்சுக்கூட கேட்பாங்க...

அடிச்சுக்கூட கேட்பாங்க...

இது பாபநாசம் படத்தில் கமல் தன் குடும்பத்தினருடன் பேசும் காட்சி. இதனை வைத்தும் காமெடியாக ஒரு மீம்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.


பானையில் மாட்டிய புலி...

பானையில் மாட்டிய புலி...

கடந்த வாரம் தண்ணீர் குடிப்பதற்காக குடியிறுப்புப் பகுதிக்குள் வந்த புலி ஒன்று சிறிய பானை ஒன்றில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொண்டது. விஜய்க்கு வந்த சிக்கலை வித்தியாசமாக இப்படி புகைப்படம் போட்டுக் குறியீடாகவும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.


மொக்கை...

மொக்கை...

இந்த மீம்ஸ் தம்பி ராமையா பேசுவது போல் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில், படம் முதல் அரை மணி நேரம் மட்டும் மொக்கையாக இருக்கும், அப்புறம் அதுவே நமக்கு பழகி விடும் என தம்பி ராமையா கூறுவது போல் உள்ளது.


இந்த ஐடியா சூப்பர்...

இந்த ஐடியா சூப்பர்...

இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவது போல் உள்ளது இந்தக் காமெடி. மூன்று நண்பர்கள் சேர்ந்து புலி படத்தைப் பார்ப்பதாக் கூறி, சமையல் புளியை ஒரு பேப்பரில் வைத்து பார்ப்பது போல் இந்த புகைப்படம் உள்ளது.


காக்கா முட்டைகளையும் விடவில்லை...

காக்கா முட்டைகளையும் விடவில்லை...

புலி படத்தோடு ஒப்பிடுகையில் சுறா படம் எவ்வளவோ பெட்டர்- என காக்காமுட்டை சிறுவர்கள் பீட்ஸா குறித்து பேசும் டயலாக்கை டிங்கரிங் பார்த்துள்ளார் நெட்டிசன்கள்.


English summary
After some poor reviews and response, people started trolling “Puli” by creating meme in social media. Within few hours after first show, Puli Memes doing round in facebook, twitter and whatapp.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil