»   »  ஆன்லைனில் வெளியான புலி - அதிர்ச்சியில் படக்குழு

ஆன்லைனில் வெளியான புலி - அதிர்ச்சியில் படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான புலி திரைப்படம் இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி இருக்கிறது.

பிரேமம், பாபநாசம் ,பஜ்ரங்கி பைஜான் படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியான புலி திரைப்படமும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.


இது புலி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படம் வெளியாகும் முன்பு படத்தின் டிரெய்லர் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.


Puli movie on online shock producers and the fans

புலி படத்தின் டிரெய்லர் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியானதால் அவசர அவசரமாக டிரெய்லரை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்நிலையில் படம் வெளிவந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் படம் இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சியில் இருக்கின்றனர் படக்குழுவினர்.


மிகவும் பிரபலமான 5 இணையதளங்களில் படம் வெளியான அன்றே புலி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதுவரை இதனை ஏராளமான பேர் கண்டுகளித்துள்ளனர்.


புலி படம் வெளியான அன்றே படத்தின் திருட்டுக் காப்பிகளை இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றியுள்ளனர். ஏற்கனவே படம் பிரச்சினைகளை சந்தித்து தாமதமாக வெளியான நிலையில் தற்போது இணையத்திருட்டும் சேர்ந்து கொண்டதால், பாக்ஸ் ஆபிசில் புலி படத்திற்கு இதனால் பின்னடைவு ஏற்படும் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

English summary
Puli full movie is available on some websites and the producers and the fans are in shock. Vijay starrer movie was released recently all over the world.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil