»   »  இந்தியாவில் இதுவரை ரூ. 55 கோடி வசூலாம்... வெளிநாடுகளில் "புலி" நன்றாக ஓடுகிறதாமே!?

இந்தியாவில் இதுவரை ரூ. 55 கோடி வசூலாம்... வெளிநாடுகளில் "புலி" நன்றாக ஓடுகிறதாமே!?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான புலி படம் குறித்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், அது பல பகுதிகளிலும் வசூலை வாரிக் குவித்து வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

Select City
Buy Vettai Puli Tickets

உண்மையில் படத்திற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால் புலிக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது என்பது உண்மைதான். அதை மறுக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு தியேட்டர்களில் முன்பதிவாகி விட்டது.


மேலும் போட்டிக்கு எந்தப் படமும் இ்ப்போது இல்லை. வருவதாக இருந்த சில படங்களையும் கூட தள்ளி வைத்து விட்டதால் புலி படம் சோலோவாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே இதுவரை கலெக்ஷனில் எந்தப் பிரச்சினையும் வரவில்லை என்று சொல்கிறார்கள்.


முதல் வார வசூல் ஓகே

முதல் வார வசூல் ஓகே

விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் இவர்களுடன் இணைந்து 25 வருடங்களுக்குப் பின்பு ஸ்ரீதேவி நடித்திருக்கும் படம் புலி. ஆக்க்ஷன் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக புலியை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். முதல் வாரத்தில் நல்ல வசூலை ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர்.


இந்தியா

இந்தியா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான புலி முதல் வார முடிவில் சுமார் 20 கோடிகளை வசூலித்து இருக்கிறது.


உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுமார் 450க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான புலி திரைப்படம் முதல் வார இறுதியில் 15 கோடிகளை வசூலித்து இருப்பதாக கூறுகின்றனர்.


அமெரிக்காவில் 1.25 கோடி

அமெரிக்காவில் 1.25 கோடி

அமெரிக்காவில் மொத்தம் 89 திரைகளில் படம் திரையிடப்பட்டது. அதில் முதல் வாரத்தில் ரூ. 1.25 கோடி வசூலாகியுள்ளது. முதலிடத்தை பாலிவுட் படமான சிங் இஸ் பிளிங் பெற்றுள்ளது. அதன் வசூல் ரூ. 2.12 கோடியாகும்.


இங்கிலாந்தில் ரூ. 1.42 கோடி

இங்கிலாந்தில் ரூ. 1.42 கோடி

இங்கிலாந்தில் புலிக்கு ரூ. 1.42 கோடி கிடைத்துள்ளது. இங்கும் சிங் இஸ் பிளிங்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதன் வசூல் ரூ. 1.91 கோடியாகும்.


மலேசியாவில் ரூ. 1.21 கோடி

மலேசியாவில் ரூ. 1.21 கோடி

மலேசியாவில் வசூல் தொகை ரூ. 1.21 கோடியாகும். 33 திரைகளில் இங்கு புலி திரையிடப்பட்டுள்ளது. மலேசியா விஜய்க்கு அதிக ரசிகர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.


கனடா - ஆஸ்திரேலியா

கனடா - ஆஸ்திரேலியா

கனடாவில் புலிக்கு ரூ. 75.48 லட்சம் வசூலாகியுள்ளதாம். இங்கு 10 திரைகளில் புலி ஓடுகிறது. கனடாவில் பெரிய அளவில் தமிழ்ப் படங்கள் வெளியாதவில்லை என்பதால் இந்த வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் புலியின் வசூல் ரூ. 77.56 லட்சமாகும்.


முதல் வார முடிவில் ரூ. 55 கோடி வசூலாம்

முதல் வார முடிவில் ரூ. 55 கோடி வசூலாம்

முதல் வாரத்தில் தமிழகத்தில் ரூ. 32 முதல் 35 கோடிகள் வரையும், இந்தியாவின் இதர பகுதிகளில் ரூ. 20 கோடியும் வசூலித்துள்ளதாக கூறுகிறார்கள். அதாவது இந்தியாவில் மொத்தமாக ரூ. 55 கோடி வசூலாம்.


விமர்சனத்தையும் தாண்டிய வசூலா?

விமர்சனத்தையும் தாண்டிய வசூலா?

புலி படத்தை சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விமர்சனங்களும் கூட பெரிய அளவில் இல்லை. ஆனால் வசூலில் இதுவரை தங்கு தடையில்லை என்றும் செய்திகள் வருகின்றன.


எது உண்மையோ...!
English summary
Box Office: Vijay's Puli Released more than 450 Screens in Worldwide, the Film Performed well in Overseas Countries.as per the trade Puli Worldwide Box Office Collection Close to 35 Crores(App).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil