»   »  இதுதான் "புலி"க் கதையாம்.. வழக்கம் போல வாட்ஸ்ஆப்!

இதுதான் "புலி"க் கதையாம்.. வழக்கம் போல வாட்ஸ்ஆப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் ஏற்கனவே முடிந்த வரை புலியை வாட்டி வதைத்த வலைஞர்கள் தற்போது புதிய ஒரு முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.

இவர்களுக்குத் தோதாக படத்தின் வெளியீடும் 2 வாரங்கள் தள்ளிப் போயிருக்கிறது விடுவார்களா நம்ம ஆட்கள், சமூக வலைதளங்களில் முடிந்தவரை புலியைப் பற்றி நித்தம் ஒரு தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.


அதாவது புலி படத்தின் கதை இதுதான் அதுவும் புதிய கதை பாஸ் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க என்ற ரீதியில் தற்போது வாட்ஸ் ஆப்பில் கதையொன்று வலம் வருகிறது.


கதையை நான் மட்டும் படித்தால் போதுமா அதனால் என்னால் முடிந்த சேவையாக நானும் பகிர்கிறேன் என்று வரிந்து கட்டி களத்தில் குதித்திருக்கின்றனர் வலைஞர்கள்.


தற்போது வாட்ஸ் ஆப்பில் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கும் அந்தக் கதையை பற்றி இங்கே பார்ப்போம்...


ராணி ஸ்ரீதேவி - பொற்கொல்லர் பிரபு

ராணி ஸ்ரீதேவி - பொற்கொல்லர் பிரபு

அது ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை ஸ்ரீ தேவி ஆட்சி புரிகிறார். ஒரு நாள் தன் மகள் ஹன்சிகாவிற்கு வைரம் வாங்க வேண்டுமென்று தன்னுடைய படைத்தளபதி சுதீப்பிடம் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து நகரத்து பொற்கொல்லனான பிரபுவிடம் குறைந்த விலையில் வைரம் வாங்கி வருமாறு ஆணையிடுகிறார்.


குரோம்பேட்டை - பாண்டி பஜார்

குரோம்பேட்டை - பாண்டி பஜார்

சுதீப் பிரபுவிடம் பணத்தை கொடுத்து செய்கூலி, சேதாரம் இல்லாமல் வைரம் வேண்டும் என்கிறார். ஆனால் பிரபுவோ தான் அவசரமாக குரோம்பேட்டை கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக் கடையை திறந்து வைக்க செல்ல இருப்பதாகவும், பாண்டி பஜாரில் இருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் வைரம் வாங்கி வருமாறும் தன் மகனான விஜய்க்கு கட்டளையிடுகிறார்.


சுருதிஹாசனுடன் டூயட்

சுருதிஹாசனுடன் டூயட்

விஜயோ சிறுபிள்ளைத்தனமாக அந்த பணத்தை ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடியே செலவு செய்து விடுகிறார். குறித்த நேரத்தில் வைரம் வராததால் ஆத்திரம் அடைந்த சுதீப் விஜய்யை கட்டி இழுத்து அரசியின் கோட்டைக்கு கொண்டு வருகிறார். விஜய் பணத்தை செலவு செய்ததை அறிந்த ஸ்ரீதேவி அவரை கருஞ்சிறுத்தைக்கு உணவாக்கிவிட ஆணையிடுகிறார். ஆனால் விஜய்யின் அலறலைக்கண்ட சிறுத்தை இறந்து போகிறது.


ஹன்சிகா - விஜய் திருமணம்

ஹன்சிகா - விஜய் திருமணம்

இதைக்கண்ட ஸ்ரீதேவி தன் மகளான ஹன்சிகாவை சிறுத்தையைக் கொன்ற விஜய்க்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். ஆனால் அரியணையை கைப்பற்ற ஹன்சிகாவை மணமுடிக்க துடிக்கும் சுதீப், விஜய்க்கு மேலும் பல போட்டிகளை வைத்து பலப்பரீட்சை வைக்கிறார்.


சுருதி - பிரபு - விஜய்

சுருதி - பிரபு - விஜய்

இப்போட்டிகளில் எல்லாம் வென்று ஹன்சிகாவை விஜய் கை பிடிக்கிறாரா? பிரபு குரோம்பேட்டையில் நகைக்கடையை திறக்கிறாரா? ஸ்ருதிஹாசன் என்ன ஆனார் என்பதே மீதி கதை.


பின்குறிப்பு: படத்தின் ஒரிஜினல் கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..முடியலEnglish summary
Puli New Story - Now Trending in Whatsapp.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil