»   »  புலி படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக 84 நாட்கள்! - சூப்பர் சுப்புராயன் பேட்டி

புலி படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக 84 நாட்கள்! - சூப்பர் சுப்புராயன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு சினிமா பிரியர்களுக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும், சிலருக்கு ஆக்‌ஷன் காட்சிகளும், இன்னும் சிலருக்கு காதல் காட்சிகளும் பிடிக்கும், ஆனால் இன்றுவரை இந்த இரண்டுக்குமே பெயர் பெற்ற இடம் ஹாலிவுட் மட்டுமே.

இன்றளவும் உலகின் சந்து பொந்துகளிலும் ஹாலிவுட் படங்கள் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சரி, இப்ப நம்ம இந்திய சினிமாவுக்கு வருவோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னே இந்திய சினிமாவில் சண்டைக் காட்சி என்பது நம்ப முடியாத அளவுக்கு அந்தரத்தில் பறந்தும், 15வது மாடியிலிருந்து ஹீரோ குதித்து சண்டைப்போடுவதுமான காட்சிகளை வைத்து ரசிகர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தந்த படங்களின் ஸ்டண்ட் இயக்குநர்கள்.

Puli stunt scenes shot in 84 days, says Super Subbarayan

இந்த மாதிரியான காட்சிகளைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனும் 'இது இவனுக்கே ஓவரா இல்ல' என்ற கேட்குமளவுக்குத்தான் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும் என்று பலர் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுகுறித்து தற்போது முதல் முறையாக ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஆமாங்க.. இந்திய சினிமாவுல சண்டைக் காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றும் விதமாகத்தான் இன்றளவும் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

எங்கள மாதிரி ஸ்டண்ட் ஆட்கள் ஒரு படத்தில ஒரு ஆக்‌ஷன் சீன் எடுக்கணும்னா அந்த கதையை மீறாத ஒரு சண்டைக்காட்சியாகத்தான் எடுக்க வேண்டியிருக்கு, ஹாலிவுட்ல வர்ற மாதிரி எங்களால் சண்டைக்காட்சிகள் எடுக்க முடியும் அந்தளவுக்கு திறமையும் எங்களிடமிருக்கு, அதைத்தான் தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'புலி' படத்துல நாங்க எகிறி அடிச்சிருக்கோம்.

புலி படத்துல சண்டைக்காட்சிக்கு மட்டும் 84 நாட்கள் நாங்க செலவழிச்சிருக்கோம், இந்த படத்துல வர்ற சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதை நீங்க தியேட்டர்ல பார்த்தா உங்களுக்கு தெரியும்," என்றார்.

English summary
Stunt Master Super Subbarayan says that the stunt scenes of Vijay's Puli shot in 84 days.
Please Wait while comments are loading...