»   »  புலி டீசரை டிஸ்லைக் செய்த 10 ஆயிரம் பேர்... சோகத்தில் டீம்!!

புலி டீசரை டிஸ்லைக் செய்த 10 ஆயிரம் பேர்... சோகத்தில் டீம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையதளபதி விஜயின் புலி டீசர் கடந்த 21 ம் தேதி அன்று வெளியிடப் பட்டது, விஜயின் பிறந்த நாள் பரிசாக இந்த டீசரை வெளியிட்டு மகிழ்ந்தனர் புலி படப்பிடிப்புக் குழுவினர்.

சுமார் 56 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர் வெளியான அன்று இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி மகிழ்ந்தனர் விஜய் ரசிகர்கள், எந்தப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு புலி படத்தின் டீசருக்கு வரவேற்பை அளித்தனர் சினிமா ரசிகர்கள்.


ஒருபக்கம் புலி படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பைப் பெற்றாலும் மறுபக்கம் அதற்கு சமமான அளவில் எதிர்ப்புகளும் பதிவாகி உள்ளது.


வரவேற்பு பெறுவது என்ன மாதிரியான விஷயங்கள், வருத்தம் தருவது என்ன மாதிரியான செய்திகள் என்று பார்க்கலாம்.


டீசர் சாதனை

டீசர் சாதனை

புலி படத்தின் டீசர் வெளியாகி இன்றுடன் 9 நாட்கள் முடிவடைந்து உள்ள நிலையில், இதுவரை சுமார் 46 லட்சத்திற்கும் அதிகமானோர் புலி படத்தின் டீசரைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


“பிகே” யை முறியடித்த புலி

“பிகே” யை முறியடித்த புலி

இந்தி நடிகர் அமீர்கானின் பிகே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தான் இதுவரை அதிகமானோர் பேர் டவுன்லோட் செய்திருந்தனர். ஆனால் விஜயின் புலி அதனை முறியடித்து விட்டது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான ரசிகர்கள் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டவுன்லோட் செய்து இருக்கின்றனர்.


தென்னிந்திய அளவில் மூன்றாவது இடம்

தென்னிந்திய அளவில் மூன்றாவது இடம்

புலி படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் போன்றவைகளுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் லைக் ஆகியவற்றால், தென்னிந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது புலி. வேறு எந்த விஜய் படமும் செய்யாத சாதனை இது.


வருத்தம் தரும் விஷயம்

வருத்தம் தரும் விஷயம்

புலி டீசர் பெருவாரியான வரவேற்பைப் பெற்று இருந்தாலும், இன்னொரு விஷயத்தில் வருத்தத்தையும் அளித்துள்ளது. புலி படத்தின் டீசரை இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் டிஸ்லைக்(எனக்குப் பிடிக்கவில்லை) செய்துள்ளனர். இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் இவ்வளவு டிஸ்லைக்குகளைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Ilayathalapathy Vijay's "Puli" teaser, which was released on 21 June, has got record hits for a Tamil teaser."Puli" teaser has been viewed over 45 lakh times on its official YouTube page. Now Puli Teaser Made A New Record For Dislike Also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil