»   »  புலி புக்கிங்கை கிண்டலடித்துக் கலாய்க்கும் "எதிரி" ரசிகர்கள்!

புலி புக்கிங்கை கிண்டலடித்துக் கலாய்க்கும் "எதிரி" ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தின் டிக்கெட் ரிசர்வேஷன் தியேட்டர்களில் தொடங்கியதை விஜய் ரசிகர்கள் ஹெஷ்டேக் போட்டுக் கொண்டாட அது வழக்கம் போல சமூக வலைதளங்களை வைரலாக்கியது.

விடுவார்களா நம்ம வலைதள குசும்புப் புள்ளிகள். வழக்கம் போல இதற்கும் மீம்ஸ் போட்டுக் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். புலி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதைத் தப்பாகப் புரிந்து கொண்ட வலைதளவாதிகள் வழக்கம்போல தங்கள் திறமைகளை காட்ட ஆரம்பித்து இருக்கின்றனர்.


தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது #bookpuliticketinirctc ஹெஷ்டேக். அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.


சும்மா ஒரு பேச்சுக்கு

சும்மா ஒரு பேச்சுக்கு IRCTC ன்னு சொன்னா இப்படியாடா டேக் போட்டு ட்ரெண்ட் பண்ணுவீங்க என்று கேட்டிருக்கிறார் ரோபல் காந்த் என்னும் ரசிகர்.


அமெரிக்காவிலும் அறிமுகம்

மோடி ஓபாமா சந்திப்பிற்கு பிறகு புலி டிக்கெட்டை IRCTCல் புக் செய்யும் வசதி அமெரிக்காவிலும் அறிமுகம்" என்று சொல்லியிருக்கிறார் மணிமாறன் என்னும் ரசிகர்.


நீங்க கேட்ட டிக்கெட் மட்டும்

ரயில்,பஸ்,ப்ளைட் டிக்கெட்லாம் இருக்கு,நீங்க கேட்ட புலி டிக்கெட் மட்டும் இல்லை,கடல்லே இல்லையாம்" என்று வடிவேலு மீம்ஸ் போட்டு கூறியிருக்கிறார் சேதுபதி.


இது பேசஞ்சர் புலி

"இது பேசஞ்சர்புலி, இது சூப்பர்பாஸ்ட் புலி, இது கூட்ஸ்புலி ,இது IRCTCபுலி என்று டி.ராஜேந்தர் பாணியில் கூறியிருக்கிறார்" கேப்டன் கூல்.


சிறப்பு ரயில்

"புலி படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்வோருக்கான சிறப்பு ரயில் துவங்கியது" என்று கூறியிருக்கிறார் பார்த்தி மோர்போசோ.


என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா....Read more about: puli, vijay, புலி, விஜய்
English summary
Vijay's Puli ticket Reservation Memes are on rounds all social medias. Now The Following Hashtag trending in twitter page #bookpuliticketinirctc.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil