»   »  புலி டிரெய்லரும்.. புல்லரிக்க வைக்கும் டிவிட்டர் கமெண்டுகளும்

புலி டிரெய்லரும்.. புல்லரிக்க வைக்கும் டிவிட்டர் கமெண்டுகளும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவழியாக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புலி படத்தின் டிரெய்லர் நேற்று நள்ளிரவில் வெளியாகி விட்டது, டிரெய்லர் வெளியாகும் வரை #PuliTrailerCountdownBegins என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தொடர்ந்து அதனை ட்விட்டரில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருந்தனர் விஜய் ரசிகர்கள்.

நடுநடுவே சோனி மியூசிக் நிறுவனம் வேறு இன்னும் 5 நிமிடங்கள் இன்னும் சில நொடிகள் என்று ட்வீட் செய்து ரசிகர்களின் ஆர்வத்தை குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

சுமார் 1 நிமிடம் 54 நொடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லரை சரியாக 12 மணிக்கு வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது சோனி மியூசிக், வெளியான 10 மணி நேரத்தில் இதுவரை சுமார் 3,58,217 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

சுமார் 40,478 பேர் டிரெய்லரை லைக் செய்து இருக்கின்றனர் 6475 பேர் டிரெய்லரை டிஸ்லைக் செய்து இருக்கின்றனர். இன்று முதல் சுமார் 3000 க்கும் அதிகமான திரையரங்குகளில் புலி டிரெய்லர் திரையிடப்பட உள்ளது.

புலி டிரெய்லர் வெளியானது முதல் ஏகப்பட்ட ரசிகர்கள் அதனைக் கண்டுகளித்து தான் பெற்ற இன்பத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர், அவர்களில் சில பேரின் பதிவுகளை இங்கே காணலாம்.

அஜீத் ரசிகர்களுக்கு ஊறுகாய்

புலி டிரெய்லர் - அஜீத் ரசிகர்களுக்கு ஊறுகாய் கிடைச்சிடுச்சு போல என்று என்று கூறியிருக்கிறார் கோபக்காரன் (யார் மேல என்ன கோபமோ).

புலி கோட்டை பிரமாண்டம்

புலி திரைப்படத்தில் இடம்பெறும் கோட்டையும், சிஜி வொர்க்ஸும் பிரமாண்டம். ராணியாக வரும் ஸ்ரீதேவி அந்தப் பிரமாண்டத்தை பிரதிபலித்திருக்கிறார் என்று சான்வேல் கூறியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணனை நடிக்க வச்சிருக்கலாமோ?

டிரெய்லர்ல ஸ்ரீதேவி ரொம்ப வெள்ளையா லுக்கா இருக்காங்க பேசாம ரம்யா கிருஷ்ணனை நடிக்க வச்சிருக்கலாமோ என்று கேள்வி கேட்டு எதிர்பார்ப்பு இருக்கு பார்க்கலாம் என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார் நியூட்டன்.

பின்னணி இசை பரவாயில்லை

"நல்லவேளை டிரெய்லர் பின்னணி இசை பரவாயில்லை இல்லேன்னா தியேட்டர்ல வச்சி நம்மள செய்யப் போறாரோ இந்த டிஎஸ்பின்னு பயந்துட்டேன்" என்று ஆறுதல் அடைந்திருக்கிறார் கிருஷ்ணா.

சட்டுபுட்டுன்னு ஏதாவது செய்யுங்கப்பா

சட்டுபுட்டுன்னு ஏதாவது டேக்(ஹெஷ்டேக்) போடுங்கப்பா 300 கோடின்னு புலி டிரெய்லர சிறப்பா கொண்டாடிடுவோம் இது கிப்டான்.

ஹான்ஸ் சிம்மர் vs டிஎஸ்பி

என்ன இருந்தாலும் ஹான்ஸ் சிம்மர் (புகழ்பெற்ற ஜெர்மன் இசையமைப்பாளர்) கூட டிஎஸ்பிய கம்பேர் பண்ணி பேசறதெல்லாம் ரொம்ப அதிகம் கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க பாஸ் என்று கதறியிருக்கிறார் பிரவீன்.

இதைப்போல பல பேரின் ட்வீட்டுகளால் நிரம்பி வழிகிறது புலி...டிரெய்லர்.

English summary
puli Trailer Released - Related Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil