»   »  புலிப் பாய்ச்சலில் புலி டிரெய்லர்... 3 நாட்களில் 30 லட்சம் பார்வைகள்!

புலிப் பாய்ச்சலில் புலி டிரெய்லர்... 3 நாட்களில் 30 லட்சம் பார்வைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் ரசிகர்கள் மட்டுமல்லாது மொத்தத் தென்னிந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் புலி.

Select City
Buy Vettai Puli Tickets

சமீபத்தில் வெளியான புலி படத்தின் டிரெய்லர் வெளியான 3 தினங்களில்(72 மணி நேரங்களில்) சுமார் 30 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.


மேலும் என்னை அறிந்தால் படத்தின் சாதனையையும் முறியடித்து இருக்கிறது, எனவே விஜயின் ரசிகர்கள் தற்போது #PuliTrailerHits3MillionViews என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.


இந்திய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கும் புலி டிரெய்லரில் இருந்து ரசிகக் கண்மணிகளின் ஒரு சில ட்விட்டர் பதிவுகளை இங்கு காணலாம்.


ஆளவந்த ராணி ஸ்ரீதேவி

ஆண்மையுள்ள ராணி ஸ்ரீதேவி ஆண்களுடன் போட்டியிட்டுத் தோற்றதில்லை என்று ரைமிங்காக சொல்லியிருக்கிறார் ப்ரீத்தி.


இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் டிரெய்லர்

புலி இந்தியாவின் 2 வது விரும்பப்படும் டிரெய்லராக மாறியிருக்கிறது இதுவரை 75,000 லைக்குகளையும், 30 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது என்று புள்ளி விவரங்களை அடுக்கியிருக்கிறார் அந்தோ சச்சின்.


தமிழ் சினிமாவின் வேகமான பார்வை

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் மிகவும் குறுகிய நேரத்தில் அதிகமான பார்வைகளைக் கடந்திருக்கிறது புலி டிரெய்லர் என்று சந்தோஷத்துடன் கூறியிருக்கிறார் அபிஷேக்.


இந்தியாவின் விருப்பமான 3 டிரெய்லர்கள்

இதுவரை இந்தியாவில் அதிகம் லைக்குகள் பெற்ற டிரெய்லரில் கிக் முதலிடத்திலும், புலி 2 வது இடத்திலும், கிரிஷ் 3 மூன்றாவது இடத்திலும் உள்ளது என்று கூறியிருக்கிறார் மர்மயோகி.


தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒன்று

எனது வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒன்றாக புலி திரைப்படம் மாறும் என்று ஆந்திர ரசிகர் மன்றம் சார்பாக விஜய் ரசிகர் ஒருவர் கூறியிருக்கின்றார்.


விஜயுடன் ஸ்ரீதேவி ஆவேசம்

விஜய் மற்றும் ஸ்ரீதேவி இருவரின் நடிப்பும் என்னைக் கொன்று விட்டது, இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று ஷைக்ஷரீன் கூறியிருக்கிறார்.


தற்போது புலி டிரெய்லர் 40 லட்சங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது, அதனைக் கொண்டாட மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.


நீங்க கொண்டாடுங்க பாஸ், படம் வெளியாகிற வரைக்கும் தினந்தோறும் ட்விட்டரில் திருவிழாதான் போல....English summary
Vijay's Puli Trailer Crossed 3 Million Views, Within 72 Hours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil