»   »  "தளபதியே" சொல்லிட்டாரு... ஆகஸ்ட் 20ல் வெளியாகிறது புலி டிரைலர்!

"தளபதியே" சொல்லிட்டாரு... ஆகஸ்ட் 20ல் வெளியாகிறது புலி டிரைலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், சுதீப், மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் புலி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரவிருக்கிறது. சுமார் 100 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப் பட்டிருக்கும் புலி திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் புலி திரைப்படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 20 ம் தேதி வெளியாகும் என்று புலியின் நாயகன் விஜய், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

விஜயின் ரசிகர்கள் புலி படத்தின் டிரைலரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர், இந்நிலையில் ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் புலி படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது.

புலி டிரைலர் - விஜய் அறிவிப்பு

சற்று நேரத்திற்கு முன்பு வெளியான இந்த அறிவிப்பில் புலி டிரைலர் ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதியில் வெளியாகும் என்று ரத்தினச் சுருக்கமாக நடிகர் விஜய் அறிவித்து இருக்கிறார்.

ஸ்ரீதேவி மேடத்திற்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீதேவி மேடத்திற்கு வாழ்த்துக்கள்

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரீதேவி மேடத்திற்கு ஒட்டுமொத்த புலி படக்குழுவினரின் சார்பாகவும் வாழ்த்துகிறோம் என்று விஜய், ஸ்ரீதேவி இருவரும் அரச உடையில் நிற்பது போன்ற ஒரு படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

உறுதி செய்த சோனி மியூசிக்

விஜயின் இந்த போஸ்ட்டை உறுதி செய்வது போல புலி படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கும் சோனி மியூசிக் நிறுவனம் உங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ஆகஸ்ட் 20 ம் தேதி புலி படத்தின் டிரைலர் வெளியாகிறது" என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு

ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு

இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் இந்த அறிவிப்பை புலி படக்குழுவினர் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே விஜயின் பிறந்தநாளில் படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி பல்வேறு சாதனைகளையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்

தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்

விஜய் அறிவித்ததுதான் தாமதம் அவரது ரசிகர்கள் தற்போது இந்த செய்தியை தீவிரமாய் பரப்பி வருகிறார்கள், தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ வேகத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது புலி படத்தின் டிரைலர் பற்றிய அறிவிப்பு. எது எப்படியோ டிரைலர் வெளியாகும் வரை சமூக வலைதளங்களை புலி பட டிரைலர் தொடர்பான செய்திகளே அலங்கரிக்கப் போகின்றன என்பது மட்டும் உண்மை.

போஸ்ட் புரொடக்க்ஷன்

போஸ்ட் புரொடக்க்ஷன்

தற்போது ஒட்டுமொத்த புலி படக்குழுவினரும் படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர், விஜயின் திரை வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் உருவான திரைப்படம் புலி என்பது குறிப்பிடத்தக்கது.

தீயா வேலை செய்வாங்களோ...

English summary
The trailer of "Puli" will release on August 20. The News has Been Announced on Vijay's Official Twitter Page and Wrote, # Puli Trailer from August 20th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil