»   »  சமூக வலைத்தளங்களில் புலியை ஓட்டும் வலைஞர்கள்.. போலீசுக்கு போக தயாரிப்பு தரப்பு திட்டம்

சமூக வலைத்தளங்களில் புலியை ஓட்டும் வலைஞர்கள்.. போலீசுக்கு போக தயாரிப்பு தரப்பு திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கேலி செய்துவருவோருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். மீம்ஸ் எனப்படும் கேலி படங்களை புலிக்கு எதிராக உருவாக்கி உலவ விட்ட பிரபல சமூக வலைஞர் ஒருவர் பேஸ்புக் தளம் திடீரென முடக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த வினியோகஸ்தர் ஷிபு மீன் மற்றும், விஜய் பி.ஆர்.ஓ ஆகியோர் இணைந்து எஸ்.கே.டி ஸ்டூடியோஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி, புலி படத்தை தயாரித்தனர்.


Puli trollers may face the music from the production team

இந்நிலையில், புலி திரைப்படம் திரைக்கதையில் சோர்வுடன் காணப்படுவதை சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் கடுமையான கிண்டல்களுக்கு உள்ளாகிவருகிறது.


புலி திரைப்படத்தின் வசூலை இதுபோன்ற கருத்து பரிமாற்றங்கள் பாதிப்பதால், தொடர்ச்சியாக, புலி பற்றி மீம்ஸ் உருவாக்கி கேலி செய்வோர், கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனிடையே, பிரபல மீம்ஸ் உருவாக்குநர் ஒருவரின் பேஸ்புக் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக சமூக வலைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் தயாரிப்பு தரப்பு இது பற்றி எதுவும் கூறவில்லை.


ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படம் மோசமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்தோர் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

English summary
Puli trollers may face the music from the production team as they plan to file police complaint against trollers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil