»   »  "இளைய தளபதி"யின் புலி ஜான் கார்ட்டர் ஆங்கிலப் படத்தின் காப்பியாமே?

"இளைய தளபதி"யின் புலி ஜான் கார்ட்டர் ஆங்கிலப் படத்தின் காப்பியாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் தொடங்கி இந்த வாரம் வரையிலும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறது, புலி படத்தின் டீசர்.

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக கடந்த வாரம் வெளியிடப் பட்டது.

படத்தின் டீசர் எதிர்பார்த்ததை விடவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் இது எந்தப் படத்தின் காப்பி என்று பிரித்து மேய்ந்து கொண்டு இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

ஆமாம் சிம்புதேவன் இயக்கத்தில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் புலி படம், 2012 ல் வெளிவந்த ஜான் கார்ட்டர் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று ஆதாரத்துடன் சமூக வலை தளங்களில் இரண்டையும் கம்பேர் செய்து போட்டு இருக்கின்றனர்.

வீடியோவை பார்த்து அவர்கள் சொல்லும் இடங்களை கவனித்தால் அட ஆமாம் என்று ஆச்சரியத்தில் நீங்களும் ஆழ்ந்து விடுவீர்கள்.

பறந்து மேலே வரும் விஜய்

பறந்து மேலே வரும் விஜய்

புலி டீசரில் விஜய் கீழே இருந்து மேலே பறந்து வந்து, சண்டை இடுவது போல இருக்கும். ஜான் கார்ட்டர் படத்தில் அதே போன்று நாயகன் சண்டைக் காட்சியில் பறந்து மேலே வருகிறார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

அரச உடையில் நடிகை ஸ்ரீதேவி நடந்து வருவது போன்று ஒரு காட்சி புலி டீசரில் இருக்கும், ஜான் கார்ட்டர் படத்தின் நாயகி அதே போன்று அச்சுப் பிசகாமல் அரச உடையில் நடந்து வருகின்றார்.

கண்களின் நிறம் நீலம்

புலி டீசரில் ஸ்ரீதேவி, விஜய் போன்றோரின் கண்கள் நீல நிறத்தில் இருக்கும், ஜான் கார்ட்டரில் அதே போன்று படம் முழுவதும் ஏராளமான பேரின் கண்கள் நீல நிறங்களில் அமைந்திருகின்றன.

குதிரையில் செல்வது

புலி டீசரில் குதிரையில் செல்வது மற்றும் காட்டிற்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள் ஆகியவை அச்சுப் பிசகாமல், அப்படியே ஜான் கார்ட்டரை ஒத்திருக்கிறது.புலியின் டீசர் மற்றும் ஜான் கார்ட்டரின் டிரைலர் இரண்டையும் ஒருமுறை பார்த்தால் கண்டிப்பாக அது உங்களுக்கே புரியும்.

எப்படியோ ஹாலிவுட் ரேஞ்சுக்கு நாமளும் மாறினால் சரித்தான்!

English summary
Puli is an upcoming Indian Tamil action-adventure fantasy film written and directed by Chimbu Deven. The film features Vijay in a dual role alongside an ensemble cast including Sudeep, Prabhu, Sridevi, Shruti Haasan, Hansika Motwani andNandita. Now the following question viral in all social medias, John Carter English movie inspiration for Vijay’s puli.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil