»   »  'புலி'யைக் குடும்பம் குடும்பமாக சென்று பாருங்கள் - ஸ்ரீதேவி

'புலி'யைக் குடும்பம் குடும்பமாக சென்று பாருங்கள் - ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள் என்று நடிகை ஸ்ரீதேவி தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி திரைப்படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.


Puli Watch With Your Kids & Friends to the Nearest Theater - says Sridevi

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி. இவர் புலி திரைப்படத்தில்
ராணி வேடத்தில் நடித்துள்ளார்.


இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவியை மையப்படுத்தி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இந்த போஸ்டரை தனது டுவிட்டர் இணையதளத்தில் ஸ்ரீதேவி பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது ஸ்ரீதேவி தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்."அக்டோபர் முதல் தேதி வெளியாகும் ‘புலி' படத்தை உங்கள் குடும்பம், குழந்தைகள், நண்பர்களுடன் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.


English summary
Actress Sridevi Says " Puli a Fun Filled Fantasy film Watch With Your Kids & Friends to the Nearest Theater".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil