»   »  விஜயின் புலிக்கு 'பெண் புலி'யால் பெரும் போட்டி!

விஜயின் புலிக்கு 'பெண் புலி'யால் பெரும் போட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்துக்கு கடும் போட்டி கொடுக்கப்போகிறது 'பெண் புலி' அனுஷ்கா நடித்த 'ருத்ரமாதேவி' என்கிறது திரையுலக வட்டாரம்.

அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள, விஜய் நடித்த புலி திரைப்படம், சென்சாரில் "யு' சான்றிதழைப் பெற்றுள்ளது. குழந்தைகளை கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள், இந்த படத்தில், அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதிக தியேட்டர்களில் புலி

அதிக தியேட்டர்களில் புலி

பொதுவாக விஜய்க்கு, தமிழகம் தாண்டி கேரளாவில் மட்டும் ரசிகர்கள் அதிகம். ஆனால் புலி திரைப்படம், அதன் பிரமாண்ட காட்சியமைப்புகளுக்காக ஆந்திராவிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

கர்நாடகாவிலும், முந்தைய விஜய் படங்களை ஒப்பிட்டால் இப்படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம். இதற்கு கன்னட முன்னணி நடிகர் சுதீப் அப்படத்தில் நடித்துள்ளதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ருத்ரமாதேவி

ருத்ரமாதேவி

இந்நிலையில்தான், புலிக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில், அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் தயாரான ருத்ரமாதேவி அக்டோபர் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாம். இந்தப் படம் உண்மை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பிரமாண்டமான திரைப்படம்.

மற்றொரு அருந்ததி?

மற்றொரு அருந்ததி?

ஏற்கனவே அனுஷ்கா தனது தோள் மீது முழு பாரம் ஏற்று நடித்த அருந்ததி என்ற பிரமாண்ட படம் சக்கைபோடு போட்டது. அதேபோல ருத்ரமாதேவி மீதும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. தமிழில் நேரடிப்படமாக நிறைய சென்டர்களில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

புலிக்கு ஒப்பீடு தொல்லை

புலிக்கு ஒப்பீடு தொல்லை

ஏற்கனவே பாகுபலி படத்தின் பிரமாண்டத்துடன் புலி படத்தை ஒப்பிட்டு பார்க்க வாய்ப்புள்ளது. பாகுபலி உருவான காலகட்டம் மற்றும் அதற்கான பொருட்செலவை ஒப்பிட்டால் புலி படத்துக்கு செலவிடப்பட்ட நேரமும், தொகையும், குறைவு. எனவே அந்த பிரமாண்டம் இதில் இருக்க வாய்ப்பில்லை. இப்போது, ருத்ரமாதேவியின் பிரமாண்டத்திற்கும் ஈடுகொடுக்க வேண்டிய நிலை புலிக்கு உருவாகியுள்ளது.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

எனவேதான், "புலி' படத்தைப் பார்க்கும்போது "பாகுபலி' படத்தை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ரெண்டும் வெவ்வேறு வகை படங்கள் என்று "புலி' கேமராமேன் நட்ராஜ் முன்னெச்சரிக்கையாகவே சொல்லியிருக்கிறார்.

English summary
Actor Vijay's Puli will get a tough competition from the movie Rudramadevi, says film analysts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil